புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2021)

மாம்சமும் ஆவியும்

கலாத்தியர் 5:17

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;


ஒவ்வொரு போராட்டத்திலும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போராடும் இரண்டு பகுதியினர் இருப்பார்கள் என்பதை கடந்த தியானங்களிலே பார்த்தோம். ஆண்டவரரிய இயேசு வழியாக மீட்பைப் பெற்று, தேவனுடைய பிள்ளைகாள மறுபடியும் பிறந்த நம்முடைய வாழ்க்கை யிலே ஏற்படும் போராட்டங்கிலே இந்த இரண்டு பகுதியினர்கள் யார்? மதுபான வெறி கொள்ளுதலுக்கு அடிமையாக இருந்த ஒரு மனி தனாவன், ஆண்டவர் இயேசு வழி யாக பூரணமாக விடுதலையை பெற் றுக் கொண்டான். சில மாதங்களுக்கு பின்பு, தூரத்திலே வசிக்கும், தன் உறவினனொருவரின் விருந்து சென் றிருந்தபோது, அங்குள்ள சிலர் அவனை நோக்கி: நீ கொஞ்சம் மது அருந்தினால் என்ன? உன்னைப் பார்; பதற்கு இங்கு ஒருவரும் இல்லை என்று அவனை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அவனும் அவர்கள் கூறியவற்றைக் குறித்து மனதிலே சிந்தனை செய்ய ஆரம்பித்தான். அவன் சிந்தையின் ஒருபகுதி கொஞ்சம் குடித்தால் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தது. இன்னுமொரு பகுதி, பழைய வாழ்க்கைக்கு திரும்பாதே, சிறிய ஆரம்பம் பெரிய விளைவை உண்டு பண்ணும் எனவே அதைத் திரும்பவும் தொடாதே என்று கூறிக் கொண்டு இருந்தது. அதாவது, அவனுடைய மனதினிலே போராட்டம். அவன் மாம்சசிந்தைக்கு இடங் கொடுத்ததால், அவனுடைய பழைய சுபாவம் உயிரடையும்படி அவனை பழைய வாழ்க்கைக்கு அழைத்தது. அது போராட்டத்தின் ஒரு பகுதி. அதை எதிர்த்து பரிசுத்த வாழ்வு வாழும்படி அவனை உந்துதல் செய்யும் ஆவிக்குரிய சிந்தை இரண்டாவது பகுதி. இந்த இரண்டு பகுதிகளும் அவனுக்குள்ளேயே இருக்கின்றது. அவை கள் ஒன்றுக்கொன்று விரோமாக போர் செய்கின்றது. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. இவ்வண்ணமாகவே, நம்முடைய வாழ்க்கையின் போராட்டங்களின் சூழ்நிலைகள் வெவேறாக இருந்தாலும், ஆவிக்குரிய போராட்டங்கள் யாவும் நமக்குள்ளே நடைபெறுகின்றது. ஒரு பகுதி தேவ சித்தத்தை நிறைவேற்றும்படிக்கும், மற்றய பகுதி நம்முடைய சுய சித்தத்தை நிறைவேற்றும்படிக்கும் போர் செய்கின்றது. நாமே தேவ சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, என் வாழ்வில் ஏற்படும் எந்த சூழ்நிலையிலும் நான் உம்முடைய வழியைவிட்டு விலகாதபடிக்கு உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:6