புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 02, 2021)

வேண்டாத போராட்டங்கள்

சங்கீதம் 119:63

உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக் கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.


சில மனிதர்கள் போராட்டம் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று அதை தேடி அலைகின்றார்கள் அதை அவர்கள் கண்டு கொள்ள முடியாதிருப்பதினாலே, எங்கே நிம்மதி உண்டு என்ற தேடுதல் அவர்களுக்கு போராட்டமாக மாறிவிடு கின்றது. வேறு சிலர் தங்களுடைய வாழ்விலே ஒரு போரட்டமும் இல்லை என்று தங்கள் நிலைமையை நியாய ப்படுத்திக் கொள்கின்றார்கள். தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்துவதே அவர்களுக்கு போராட்டமாக மாறி விடுகின்றது. நம்முடைய வாழ்விலே போராட்டங்களை யாவையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டுமா? அல்லது போராட்டங்கள் யாவற்றிலும் பங்களாகியாக மாற வேண்டுமா? ஒரு வாலிபனானவன், தன் திருமணத்திற்குரிய ஆயத்தங்கள் யாவும் நிறைவேற்றி முடியத்த பின்பு, தன் நண்பர்களோடு சேர்ந்து தன் இளமைக் காலத்தின் கடைசி வாரத்தை கொண்டாட வேண்டும் என்று ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு தன் நண்பர்கள் யாவரையும் அழைத் தான். அவனுடைய நண்பர்களில் ஒருவன் கிறிஸ்துவை அறிந்தவனாக இருந்தான். கிறிஸ்துவின் வழியிலே நடக்கும் அவனுக்கு, புகைத்தல், வெறி கொள்ளுதல், மோக பாவ இச்சைகள் போன்ற எந்த தகாத பழக் கங்களும் இல்லை. அவைகளை செய்ய வேண்டும் என்னும் எண்ணமும் அவனிடம் இருந்ததில்லை. திருமணமாகும் தன் நண்பனை அழைப்பை ஏற்று இரவு கேளிக்கை விடுதிக்கு செல்வதா அல்லது அந்த அழை ப்பை நிராகரித்து நண்பனின் மனதை புண்படுத்துவதா? என்னும் போரா ட்டம் அவனுக்கு உண்டாயிற்று. இந்தப் போராட்டமானது, அவன் தன் சுய தீர்மானத்தின்படி தனக்கு வருவித்துக் கொண்டான். கிறிதுவவை அறிந்த அந்த நண்பனானவன், எப்போது போராட்டத்திற்கு வழி வகுத்தான்? இந்த போராட்டத்தை அவன் தன் வாழ்க்கையிலே தவிர்த் திருக்க முடியும் ஆனால் அவன் கிறிஸ்துவை அறியாமல், தகாத வழிகளிலே நடக்கும் நண்பர்களோடு தன் ஐக்கியத்தை ஏற்படுத்திய நாளிலே அது ஆரம்பமானது. இப்போது இவன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? தேவ வசனத்தின்படி தன் வாழ்வை சரிப்படுத்திக் காத்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தை மீறிநடப்பதினால் நாம் நமக்கு போராட்டங்களை உண்டு பண்ணிவிடக்கூடாது. அவை வேண்டாத போராட்டங்கள். தேவனுக்கு பயந்து அவருடைய வழிக ளிலே நடக்கின்றவர்களோடே நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

என்னை பேர் சொல்லி அழைத்த தேவனே, உம்மைவிட்டு விலகிப் போகும் இருதயத்தை என்னை விட்டு அகற்றி, உம்முடைய வழிகளிலே நடக்கும் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 2:4-10