புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2021)

நீதிமான் அசைக்கப்படுவதில்லை

நீதிமொழிகள் 10:30

நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;


ஒரு குறிப்பிட்ட தேசத்தை ஆளும் ராஜாவானவன் இன்னுமொரு தேச த்திற்கு போர் செய்ய செல்லும் போது அந்த இரண்டு நாடுகளுக்கி டையே போராட்டம் உண்டாகின்றது. குறிப்பிட்ட தேநத்தின் ராஜாவானா வன், மற்றய தேசத்தை எதிர்த்து போர் புரியும்படி செல்லும் காரண ங்கள் என்ன? அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சில: மற்றய தேசத்தை கைபற்றி தன் ஆட்சியை விஸ்தாரப்படுத்த வேண் டும். மற்றய தேசத்திலுள்ள விலை யேறப்பட்ட வஸ்துக்களை கொள் ளையடிக்க வேண்டும். மற்றய தேச த்திலுள்ள மக்களை தனக்கு அடி மைகளாகிக் கொள்ள வேண்டும் அல்லது மற்ற தேசம் தன்னுடைய தேசத்தைவிட மேன்மையடைந்து விடக்கூடாது என்று பல காரணங்களு க்காக போருக்கு செல்லலாம். அந்த காரணங்களை மற்ற தேசத்தின் ராஜா ஏற்றுக்கொள்ளாதபடியினாலே, எதிர்த்து போர் புரிவதால் அங்கே போராட்டம் உண்டாகின்றது. எல்லா மனிதர்களின் வாழ்விலும் போராட் டங்கள் உண்டு. தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழும்படி நாம் தீர்மானம் செய்யம் போது, இன்னும் அதிகமாய் நம்மை எதிர்த்து போராடும் சக்திகள் பல உண்டு. ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்திருக்கும் சமாதானமான வாழ்வை கெடுத்துவிடுவதும், மேலான பரம இலக்கை நாம் அடையாதபடிக்கு தடை செய்வதே நம்மை எதிர்க்கும் சக்திகளின் நோக்கமாக இருக்கின்றது. வாழ்விலே ஏற்படும் போராட்டங்களிலே துன்பங்கள், துயரங்கள், சோதனைகள், வேதனை கள், உயர்வுகள், தாழ்வுகள், பாடுகள், உபத்திரவங்கள், சவால்கள், உண்டாகின்றது. நம்முடைய வாழ்விலே போராட்டங்கள் பல வழிக ளிலே உண்டாகலாம். போராட்டங்களின் காரணங்கள் எதுவாக இருந் தாலும், போராட்டங்களை ஆரம்பித்தவர்கள் யாராகவும் இருந்தாலும், இந்த உலகத்தின் நீதி நியாயங்கள் எப்படியாக இருந்தாலும், நம்மு டைய பிரதானமான இலக்காகிய நித்திய ஜீவனை அடையும்படி தடை யாக இருக்கும் யாவற்றையும் நாம் தேவனுடைய வார்த்தையின்படி நிதானித்தறிந்து, அவற்றை ஜெயம் கொள்ள வேண்டும். நீதிமான் கர்த்தருக்கு பயந்து அவருடைய வழிகளிலே நடக்கின்றான். நிலையற்ற இந்த உலக வாழ்விலே போராட்டங்கள் வந்தாலும், தன்னுடைய அசை யாத நம்பிக்கையின் முடிவு நித்திய மகிழ்ச்சி என்பதை அவன் அறிந்திருக்கின்றான். கர்த்தருடைய வழி தனது அரண் என்று அவன் நிச்சயித்திருப்பதால் அவன் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

ஜெபம்:

பரலோக தேவனே, கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்தையை சகித்து, இந்த உலகத்திலே உண்டாகும் போராட்டங்களை ஜெயித்து உம்முடைய திருச்சித்தத்தை நிறைவேற்ற எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 6:29