புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 30, 2021)

யாவையும் செய்து முடிப்பார்

சங்கீதம் 57:2

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னத மான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்


ஒரு வைத்தியரிடம் சென்ற மனிதனொருவன், தன் காலிலே ஏற் பட்டிருக்கும் பெரும் காயத்தை குறித்து விரிவாக எடுத்துக் கூறினான். அந்த காயம் தன்னுடைய கவனயீனத்தால் ஏற்படவில்லை, ஆனால் என் சக ஊழியன் ஒழுங்காக சைக்கிளை ஓட்டத் தவறியதாலே இத் தனை பெரிய விபரீதம் எனக்கு ஏற்பட்டது எனத் தன் அவல நிலையை கூறிக் கொண்டான். வைத்தியர் அவனை நோக்கி: தம்பி, நடந்த சம் பவம் கடந்துவிட்டது. இப்போது நான் இந்தக் காயத்திற்கு மருந்துகட்டப் போகின் றேன். நீ பூரண சுகமடைவதற்கு இன் னென்ன காரியங்களை அடுத்த சில கிழமைகளுக்கு செய்ய வேண்டும் என்று அவைகளை எழுதிக் கொடு த்தார். ஆனாலும் அவனோ, வீடு சென் றபின்பும், தனக்கு ஏற்பட்ட விபரீதத் தையும் அது எப்படியாக வந்தது என்பதையும் நண்பர்களுக்கும், உறவி னர்களுக்கும், அயலவருக்கும் கூறுவதிலேயே கருத்துள்ளவனாக இருந் ததால், வைத்தியர் கூறிய ஆலோசனைகளை அவன் கடைபிடிக்க மறந்து போய் விட்டான். அதனால், அவனுடைய காயம் நாட்பட்ட புண்ணாக மாறிவிட்டது. பிரியமானவர்ளே, அறிந்தோ அறியாமலோ மற்றவர்கள் நமக்கு தீமை செய்யும் போது ஏற்படும் மனப்புண்கள் மிகவும் வேத னையைத் தரும் என்பது உண்மை. ஆனால், சுய அனுதாபமும், சுய நீதியும் நம் கண் களை பிரச்சனை, குறைவு, குற்றம், தீமை போன்றவ ற்றிலேயே பதிய வைக்கும். காற்றும் புயலும் படகை அசைக்கும் போது பயமும் திகிலும் உண்டாகும், அதன் மத்தியிலே நாம் காற்றையும் புய லையும் பற்றி விஞ்ஞானத்தை பேசிக் கொள்ளாமல், வாழ்க்கைப் பட கிலே நமக்கு மாலுமியாக வரும் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி பார்க்க வேண்டும். நம் நாட்களை, பிரச்சனைகளை பேசுவதிலும், அதை பெரிது படுத்துவதிலும், நியாயம் பேசுவதிலும் விரயப்படுத்துவதையே எதிராளியாகிய பிசாசானவன் விரும்புகின்றான். இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்தரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கி ன்றார். எனவே சுய அனுதாபத்திலே மூழ்கி வாழ்க்கையிலே சோர்ந்து பின்னிட்டு திரும்பாமல், தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப் பட்ட விபரீதங்கள் யாவையும் சகித்த இயேசுவையே நினைத்துக்கொள் ளுங்கள். அவருடைய நாமத்திலே நமக்கு ஜெயமுண்டு.

ஜெபம்:

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, நெருக்கடியான நேரங்கள் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ளும் போது, நான் அமர்ந்திருந்து, நீரே தேவனென்று அறிந்துகொள்வேன். உம்மாலே எல்லாம் ஆகும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 46:10