புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2021)

பரிசுத்தவான்களின் பாடுகள்

எபிரெயர் 10:23

வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.


வாழ்க்கையிலே போராட்டங்கள், உபத்திரவங்களும், சவால்கள், துன்ப ங்களும் சூழந்து கொள்ளும் போது மனிதர்கள் மன வேதனையடைகி ன்றார்கள். தாங்கள் நம்பியிருந்தவர்கள் தங்ளுக்கு துரோகம் செய்யும் போது அதனால் உண்டாகும் நோவு இன்னும் அதிகமாயிருக்கும். இந்த உலகிலே இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கூடாக ஒவ்வொரு மனிதனும், அவன் தன் வாழ்விலே ஏதோ ஒரு கட்டத்திலே கடந்து செல்கின்றான். ஆனாலும் சிலர் அதை ஏற்றுக் கொள் ளாமல், தங்களுடைய வாழ்வு எப் போதும் சிறப்பாகவே இருக்கின்றது என்று கூறிக் கொள்வார்கள். அப்ப டியாக உண்மையிலே வாழ்வு சிற ப்பாக இருந்தால் அது அவர்களுக்கு நல்லது. வேதத்திலே காணும் முன்னோடிகளாகிய பரிசுத்தவான்களும் கூட பல போராட்டங்கள், நிந் தைகள், அவமானங்கள், உபத்திரவங்களை கடந்து சென்றார்கள். நாமும் நம்முடைய வாழ்விலே இப்படிப்பட்ட துயரங்கள் சூழ்ந்து கொள் ளும் போது அதை எப்படியாக எடுத்துக் கொள்கின்றோம் என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் நெருக்கத்தின் நாட்களை கடந்து செல்கின்றவர்களாக இருக்க வேண்டுமே தவிர துயரத்திலே தரித்து நிற்கின்றவர்களாக மாறிவிடக் கூடாது. தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கங்களிலே தரித்து நின்று தங்களுடைய சோக கதைகளையே ஆண்டாண்டு காலமாக பேசிக் கொள்ளும் போது, அங்கே சுய அனுதாபமும் சுயநீதியும் உண்டாகிவிடுகின்றது. இது கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறக்கின்ற வாழ்க்கையை நோக்கிச் செல்லும் பாதை அல்ல. நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, கெத்சமனே பூங்காவிற்கு சென்று அங்கே திகிலடை யவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அவருடைய ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கங்கொண்டது. அந்த வேளையிலே தன்னை தன் பிதாவிடம் ஒப்புக்கொடுத்து ஜெபம் பண்ணினார். 'என்னுடைய நிலை உங்களுக்கு தெரியாது. நான் உங்களைப் போல அல்ல, நான் பெலவீனமுள்ளவன்' என்று சிலர் கூறிக் கொள்ளலாம். ஆனால், நமக் குள்ளே வாசம் பண்ணுகின்றவர் ஒரே ஆவியானவர். அவர் பெலமுள்ள வனுக்கும் பெலனில்லாதவனுக்கும் உதவி செய்ய வல்லவராக இருக்கி ன்றார். பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் அதி சீக்கிரமாய் நிறை வேறும். நீங்களும் அந்தப் பரிசுத்தவான்களின் பட்டியலில் இருக்கின்றீர் கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். நம்பிக்கையை அறிக்கை யிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்

ஜெபம்:

சோர்ந்து போகும் வேளையில் தேற்றுகின்ற தேவனே, பெலனற்ற வேளைகளிலே நீர் எனக்கு பெலனாக வருவதற்காக நன்றி. உம்மைக் குறித்த நம்பிக்கையில் அசைவில்லாதிருக்க என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:1