புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2021)

கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்

நீதிமொழிகள் 19:21

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.


ஒரு மனிதனானவன், ஒரு குறிப்பிட்ட பிரயாணமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட பின்பு, வயதான மூப்பர் ஒருவரிடம் ஆலோ சனை கேட்டான். அந்த மூப்பரின் ஆலோசனை அவனுடைய திட்டதிற்கு அனுசரனையாய் இருக்கவில்லை. எனவே, இன்னுமொரு சகோதரனை அழைத்து, அவரிடம் ஆலோசனை கேட்டான். நிலைமைகளை ஆராய்ந்து பார்த்த அந்த சகோதரனும் அந்த மூப்பர் கூறியபடியே ஆலோசனை சொன்னார். தான் போட்டுக் கொண்ட திட்டத்திற்கு சாதகமாக யாராவது தேவ ஆலோசனை கூறுவார்களா என்பதே அந்த மனிதனானவனின் எண்ணமாக இருந்தது. இப்படிப்பட்ட எண்ணமுள்ளவர்கள், தேவ ஆலோச னையானது எப்படியாக இருந்தா லும், தாங்கள் தீர்மானித்துக் கொண்ட காரியத்தைவிட்டு விலகிக் கொள் ளவே மாட்டார்கள். இவர்கள் தற்போது விதைப்பதை பல ஆண்டுகள் கடந்து சென்றாலும் அறுவடை செய்வார்கள். இஸ்ரவேலை அரசாண்ட சில ராஜாக்களும், இந்த மனிதனைப் போலவே, தங்களுக்கு சாதமாக பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய பல தீர்க்கதரிகளை தங்களு க்கென்று வைத்திருந்தார்கள். அதிகாரம் ராஜாக்களிடம் இருந்ததால், தங்கள் திட்டத்திற்கு எதிராக உண்மையான தேவ வசனத்தைக் கூறும், தேவனுடைய தீர்க்கதரிசிகளுக்கு தண்டனை வழங்கினார்கள். ஆனாலும் குறித்த காலத்திலே தேவனுடைய வார்த்தை நிறைவேறும் போது பெரும் அழிவை அவர்கள் கண்டு கொண்டார்கள். கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருத லையும் என் எழு ந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுக ளைத் தூரத் திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ் ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும் என்று தேவ பக்தன் கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, தேவ ஆலோசனையை நாம் எதற்காக கேட்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவன் நம்மீது அன்புள்ளவராக இருப்பதால், எப்போதும் நம்முடைய வாழ்க்கைக்கு அதி சிறந்ததையே தருகின்றவராயிருக்கின்றார். அற்ப கால விருப்பங்களை நிறைவேற்றும்படிக்காய் மனிதர்கள் தேவ ஆலோ சனையை அசட்டை செய்து விடுகின்றார்கள். ஆனால் தேவனுடைய வசனம் ஒருகாலமும் அவமாய் போவதில்லை. தேவ ஆலோசனையை மனதார கேட்டு அதற்கு கீழ்படிகின்றவர்கள் ஒருபோதும் வெட்கப் பட்டுப் போவதில்லை.

ஜெபம்:

காலங்களை அறிந்த தேவனே, என் வாழ்வின் வருங்காலங்களை நீர் ஒருவரே அறிந்திருக்கின்றீர். எனவே நான் உம்முடைய ஆலோசனையின் வழியிலே நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:8