தியானம் (கார்த்திகை 27, 2021)
பிரியமானதை செய்ய போதித்தருளும்
சங்கீதம் 143:10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப் பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்படி புறப்பட்டு வந்தார்கள். தாவீது ராஜா தேவனாகிய கர்த்தரை நோக்கி: பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தேவனைக் கேட்ட போது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். தாவீது அங்கே அவர் களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துரு க்களை உடைந்தோடப்பண்ணினா ரென்றான். பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்தான். அப்பொழுது கர்த்தர்: தாவீது ராஜா எப்படியாக யுத்தம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் படைகளை ஜெயம் கொண்டான். தாவீது, தேவனாலே அழைப்பைப் பெற்றவன், யுத்தவீரன், தேவனாலே அபிஷேகம் பெற்ற சமஸ்த இஸ்ரவேலின் ராஜா, தேவனுடைய தீர்க்கதரிசி (அப்போஸ்தலர் 2:30), சேனைகளின் கர்;த்தரின் துதிகளை சொல்லும் சங்கீதக்காரன். அவனுக்கு எப்படிப்பட்ட தகுதிகள் இருந்தாலும், எதிரிகள் அவனை பின் தொடர்ந்து வரும் போது, கர்த்தரிடத்திலே அனுமதி கேட்கும்படி எப்போதும் தன்னைத் தாழ்த்திக் கொள்வான். கர்த்தர் போ என்றால் அவன் யுத்தத் திற்கு புறப்படுவான் இல்லாவிடில் அவன் கர்;த்தருக்காக காத்திருக்கும் இருதயம் உடையவனாக இருந்தான். நம்முடைய வாழ் விலும், நமக்கு எப்படிப்பட்ட தகுதிகள் இருந்தாலும், நாம் முன்னெடு த்துச் செல்லும் எல்லாத் திட்டங்களிலும், முதலாவதாக தேவனை நோக்கி வேண்டுதல் செய்வது நம்முடைய சுபாவமாக மாற வேண்டும். ஒருவேளை நாம் முன்னெடுக்கும் காரியம் சிறிதானதாகவோ அல்லது பெரிதானதா கவோ இருக்கலாம் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், நாம் உண்மை யாக சரியானதையும், தேவனுக்கு பிரியமானதையும் செய்ய விரும்புகி ன்றோம் என்ற எண்ணத்தை கர்த்தர் விரும்புகின்றார். எனவே அவர் நிச்சயமாக சரியானதை செய்ய நமக்கு போதித்து வழிநடத்துவார்.
ஜெபம்:
போதித்து நடத்தும் தேவனே, உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தஇ பரிசுத்தவான்களைப் போல, நானும் உம்முடைய சித்தத்தின்படி என் வாழ்வின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 நாளாகமம் 14:8-17