புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2021)

இருதயம் உற்சாகங் கொள்ளட்டும்

2 நாளாகமம் 17:6

கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது;


யூதா ராஜயத்தை யோசபாத் அரசாண்ட நாட்களிலே, அவன் தாவீது ராஜா முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, தேவனைத் தேடி, அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார். அவனுக்கு ஐசுவரி யமும் கனமும் மிகுதியாயிருந்தது. கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது. அவன் அந்நிய தேவர்களுக்குரிய மேடைகளையும் விக்கிரகத் தோப்பு களையும் யூதாவை விட்டகற்றினான். யூதாவின் பட்டணங்களிலே உபதே சம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபு க்களையும், ஆசாரியர்களையும் அனு ப்பினான். இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ் தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப்போதித்தார்கள். யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களு டைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத் ராஜாவோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள். யோச பாத் ராஜாவுக்கு முன்னிருந்த ராஜாக்களில் சிலரும், அவனுக்கு பின்னி ருந்த ராஜாக்களில் சிலரும், ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரைத் தேடாமல், அவருடைய கற்பனைகளின் வழியைவிட்டு தங்கள் கண் போன வழிகளிலே நடந்து, அந்நிய தேவர்களையும், விக்கிரகங்களை யும் பின்பற்றி அழிந்து போனார்கள். நம்முடைய அனுதின வாழ்க் கையிலும், நம் வீட்டிலும், கல்வி கற்கும் நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், ஆலயங்களிலும், வெளி இடங்களிலும், அவருடைய கட்டளைகளின் வழிகளிலே நடக்கும்படி, நம்முடைய இருதயங்களை கர்த்தரிடத்திலே திருப்பிக் கொள்ளும் போது, அவரே நமக்கு பாதுகாப்பும், அடைக்கலமுமாயிருக்கின்றார். 'அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயி ருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மை யானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்;' என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். (சங்கீதம் 112:1-3). யூத ராஜ்யத்தை சுற்றியிருந்த ராஜாக்கள், யோசபாத் ராஜா வோடு எதிர்த்து யுத்தம் செய்வதற்கு துணியாதிருந்தார்கள். எனவே நாமும் தேவனுடைய பாதுகாப்பில் வாழும்படிக்கு நம்முடைய இருதயங்கள் அவருடைய வழிகளிலே உற்சாகங் கொள்ளட்டும்.

ஜெபம்:

அடைக்கலமான கர்த்தாவே, உம்முடைய கட்டளைகளில் வழிகளிலே நடக்கின்றவர்கள் பாக்கியவான்கள். நான் உம்முடைய கட்டளைகளிலே உத்தமமாய் நடப்பதற்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 91:1-3