புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 25, 2021)

மாம்சத்தின் எண்ணங்கள் வேண்டாம்

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.


ஊரிலுள்ள எவருக்கும் பயப்படாதவனும், எந்த கலகங்களை கண்டு தயங்காதவனுமாயிருந்த ஒரு பலவான் ஆண்டவராகிய இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். தான் பெற்றுக் கொண்ட இர ட்சிப்பு கறைபடாதபடிக்கு அவன் மிகவும் கருத்துள்ளவனானான், தன்னு டைய பழைய மனிதனுக்குரிய வன்முறையான சுபாவங்களையும், அவை களை நடப்பிக்கும்படி துன்மார்க் கமான சூழலிலே வாழும் தன் பழைய வாழும் நண்பர்களையும் விட்டு தன்னை விலக்கிக் கொண் டான். ஒருநாள், ஊரிலுள்ள வாலி பனொருவன், இந்த பலவானு டைய குடும்பத்திற்கு எதிரான ஒரு குற்றத்தை செய்து விட்டான். அந்த செய்தி அந்த பலவானுடைய காது களில் எட்டியதும், ஒரு நொடிப் பொழுதிலே அவன் மிகவும் கோபமடை ந்தான். ஆனாலும், தன்னுடைய பழைய மனிதனுக்குரிய சுபாவங்களை நான் முற்றிலும் களைந்துவிட்டேன், இனி வன்முறைகளுக்கு என்னிடத் தில் இடமில்லை. எனக்குள் வாழும் தூய ஆவியானவர் இந்த பெலவீ னத்தை மேற்கொள்ள எனக்கு கிருபை செய்வார் என்று தனக்குள் கூறிக் கொண்டான். அவனுடைய கோபமானது, அவனுடைய பழைய சுபாவத்தை பலப்படுத்தும்படி இடங்கொடாமல், நீடியபொறுமையாகிய தெய்வீக சுபாவம் தன்னில் வளரும் படிக்கு அவன் இடங் கொடுத்தான். பிரியமானவர்களே, ஒவ்வொரு மனிதனுடைய முன்னைய வாழ்விலும் ஏதோ ஒரு மாம்சத்தின் கிரியையானது அவனை மேற்கொண்டிருந்தது. மாம்சத்தின் கிரியைகளாவன, விபசாரம், வேசித் தனம், அசுத்தம், காம விகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேத ங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிக ள், களியாட்டுகள் போன் றவை. இவைகளில் ஒன்றும் தன்னிடத்தில் ஒரு போதும் இருந்ததில்லை என்று சொல்கின்றவனின் இருதயத்திலே பெருமையும் கீழ்படியா மையும் தங்கியிருக்கும். நம்முடைய பழைய சுபாவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது, நாம் இயேசுவின் நாமத்தினாலே அவைக ளுக்கு இடங் கொடுக்கக்கூடாது. அப்படி நாம் இடங் கொடுத்தால், பழைய வாழ்க்கைக்குரிய மாம்ச சுபாவங்களுக்கு நாம் மறுபடியும் உயிர் கொடுக்கின்றவர்களாக இருப்போம். சோதனையின் நாட்களிலே நாம் அவைகளை திரும்பத் திரும்ப ஜெயங் கொள்ளும் போது, திவ் விய சுபாவம் நம்மில் வளர்ந்து பெருகும்போது, பழைய மனுஷனுக் குரிய மாம்சத்தின் எண்ணங்கள் பெலனற்றுப் போய்விடும்.

ஜெபம்:

பெலபடுத்தும் தேவனே, சோதனையின் நேரத்திலே, என் மாம்சத்தின் எண்ணங்கள் என்னை மறுபடியும் மேற்கொள்ளாதபடிக்கு, எல்லா மாம்ச எண்ணங்களையும் தூய ஆவியின் வல்லமையால் ஜெயிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4-5