புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2021)

இரண்டு சுபாவங்கள்

ரோமர் 6:22

பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.


இரண்டு வாலிபர்கள் தங்கள் குறிக்கோளை அடையும்படிக்கு, அனுதி னமும் உடற்பயிற்சி செய்து வந்தார்கள். முதலாவது வாலிபன்: தான் எப்படியாகிலும் தனது தேசத்தின் நல் ஆட்சியை கவிழ்த்துப் போட வேண்டும் என்று திட்டமாக தீர்மானித்தவனாக, தன் குறிக்கோளை அடையும்படி சூழ்ச்சிகளை செய்ய தன்னை ஆயத்தப்படுத்தி வந்தான். இரண்டாவது வாலிபன்: தன் தேச த்தின் நல்ஆட்சி தொடரும்படிக்கு, அதை தான் பாதுகாககும்படி ஒரு போர்வீரனாக வந்து, ராஜ சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை உடையவனாக உழைத்து வந்தான். இந்த இரண்டு வாலிபர்களில் எந்த வாலிபன் பெலனடைந்து உயரும்படிக்கு நீங்கள் உதவி செய்வீர்கள்? அல்லது எந்த வாலிபனுக்கு ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் கொடுப்பீர்கள்? நன்மையை விரும்புகின்ற யாவரும் தேசத்தின் நல் ஆட்சியை பாதுகாக்க விரும்பும் இரண்டாவது வாலிபனுக்கே உதவி செய்வார்கள் அல்லவா. ஆம், அவன் பலப்படும்படிக்கே அவனுக்கு ஆரோக்கிமான உணவுகளை கொடுப்பார்கள். இந்த இரண்டு வாலி பர்களையும், நம்முடைய பழைய மனுஷனுக்குரிய மோசம் போக்கும் ஜென்ம சுபாவத்திற்கும், புதிய மனுஷனுக்குரிய திவ்விய சுபாவத்திற் கும் ஒப்பிடலாம். கிறிஸ்துவை அறிய முன்னதாக நாம் கொண்டிருந்த பழைய வாழ்க்கையானது, தீமையை விரும்பும் முதலாவது வாலிபனுக் கும், கிறிஸ்து வழியாக உண்டாகிய இரட்சிப்பை பெற்று, திவ்விய சுபாவத்திலே வளரும் பாக்கியத்தை பெற்றிருக்கும் புதிய வாழ்க்கையா னது இரண்டாவது வாலிபனுக்கும் ஒப்பிடப்படலாம். முதலாவது சுபாவம் இந்த உலகத்தின் ஆசை இச்சைகளை நிறைவேற்றும் பாவ மனிதன். இரண்டாவது சுபாவம், தெய்வீக சுபாவங்களை வெளிக்காட் டும் மறுபடியும் பிறந்த மனிதன். உங்கள் வாழ்க்கையில் உண்டாகும், ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இவ்விரு சுபாவங்களில் எதை நீங்கள் பெலனடையும்படி உங்களுக்குள் இடம் கொடுக்க போகின்றீர்கள் என்பதை நீஙகள் தீர்மானம் செய்ய வேண்டும். முதலாவது மனிதனா னவனின் சுபாவம் தங்களுக்குள் வளரும்படிக்கு தங்கள் ஆசை இச்சை களை நிறைவேற்றுகின்றவர்கள் அதனால் உண்டாகும் அழிவை அறுப் பார்கள். இரண்டாவது மனிதனானவனின் தெய்வீக சுபாவத்திலே வள ரும்படிக்கு தங்களை திருவசனத்திற்கு ஒப்புக்கொடுத்து, அதன்படி வாழ்கின்றவர்கள் அதன் பலனாகிய நித்திய ஜீவனை அறுப்பார்கள்.

ஜெபம்:

பரிசுத்தமாகும்படி அழைத்த தேவனே, என் சிந்தையிலே உண்டாகும் பாவ எண்ணங்களை என்னைவிட்டு முற்றிலும் அகற்றிவிடும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 6:22