புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 23, 2021)

தவறான சொந்த தீர்மானங்கள்

யாக்கோபு 1:21

ஆகையால், நீங்கள் எல்லா வித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்து விட்டு,


ஐயா போதகரரே, என் சகோதரன், பழைய வாழ்க்கைக்குரிய பாவ சுபாவங்களிலிருந்து விடுதலை பெற்று, புதிய வாழ்வை கிறிஸ்து வழியாக பெற்றுக் கொண்டான் அல்லவா? பழைய அழுக்கான வஸ்தி ரத்தை களைந்துவிட்டு, திவ்விய சுபாவத்திற்குரிய இரட்சிப்பின் வஸ்தி ரத்தை பெற்ற பின்பும் ஏன் அவனுடைய வாழ்க்கையிலே பழைய பாவ சுபாவங்கள் திரும்பவும் தலைதூக்கி இருக்கின்றது? என்று ஒரு வாலிபன், தன் போதகரிடம் கேட்டான். அதற்கு போதகர்: மகனே, ஒரு தோட்டக்கா ரனானவனின் தோட்டத்திலே எவ ருமே விரும்பாத புளிப்பான கனியை கொடுக்கும் ஒரு மாமரம் நின்றது. அந்தக் கனியை சுவைத்து பார்த்த அவனுடைய நண்பனான வன், அவனுக்கு மிகவும் சுவையான கனி கொடுக்கும் மாமரத்தின் கன் றொன்றை இலவசமாக கொடுத்து, நண்பா, உன் தோட்டத்திலுள்ள அந்த பிரயோஜனமற்ற மரத்தை தறித்து வேரோடு பிடுங்கி எறிந்து விடு. அந்த மரம் உன் தோட்டத்தை கெடுக்கின்றது. உச்சிதமான கனிகளைக் கொடுக்கும் உயரகமான இந்த கன்றை நட்டு பராமரித்துக் கொள் என்று கூறினான். அந்தத் தோட்டக்காரனானவன், மிகவும் சுவை தரும் மாமரக் கன்றை தோட்டத்திலே நட்ட பின்பு, புளிப்புள்ள மாங்கனியைக் கொடு க்கும் மரத்தை தறித்துவிட்டு, அதன் வேரை பின்பு அகற்றுவோம் என்று அப்படியே விட்டுவிட்டான். நன்கு வேர்விட்டிருந்த அந்த புளிப்புள்ள மாமரம், சீக்கிரமாக துளிர்விட ஆரம்பித்தது. அவன் புதிதாக நட்டிருந்த, மிகவும் சுவை தரும் மாங்கன்று வளர்வதைவிட அது அதி வேகமாக வளர்ந்து, பெரும் விருட்சமாகி, மற்றய மரங்கள் வளராதபடிக்கு அந்த தோட்டத்தை மேற்கொண்டது. அதுபோலவே, ஆண்டவராகிய இயே சுவை நாம் நம் இரட்சகராக ஏற்றுக் கொண்ட நாளிலே, திவ்விய சுபா வத்திற்குரிய கனிகளைக் கொடுக்கும் வித்தை நம்முடைய இருதயத் திலே விதைத்தார். பழைய சுபாவமானது மறுபடியும் தலைதூக்காமல் இருப்பதற்கு, அவைகளை தூண்டிவிடும் காரணிகள் யாவும் முற்றாக நம்மைவிட்டு அகற்றப்படல் வேண்டும். ஆனால் சிலரோ, இயேசுவை அறிந்த பின்பும் பழைய வாழ்வின் பாவ சுபாவங்களில் சிலவற்றை, தங்கள் வாழ்க்கையிலே பாரமுகமாக விட்டு வைக்கின்றார்கள். அந்த சுபா வங்கள் சீக்கிரமாய் வளர்ந்து அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டு விடுகின்றது. எனவே, இரட்சிப்பை பெற்ற நாம் யாவரும், பழைய வாழ் விற்கு திரும்பாதபடிக்கு அவைகளை வேரோடு அகற்றிவிட வேண்டும்.

ஜெபம்:

மேன்மையான அழைப்பைத் தந்த தேவனே, நீர் தந்த உன்ன தமான அழைப்பைவிட்டு திரும்பவும் பழைய வாழ்க்கைக்கு போய்வி டாதபடிக்கு, அவைகளை முற்றலிலும் அகற்றிவிட பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:13-16