புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2021)

மேன்மைனயான அறிக்கை

யோபு 19:25

என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.


ஒரு ஊரிலே ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினாலே, அந்த ஊரிலுள்ள ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் முகமாக ஒரு மனிதன், தன்னிடம் இருந்த சிறிய கப்பலிலே உணவுப் பொதிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். இருள் சூழும் நேரத்திலே, திடீ ரென ஏற்பட்ட பெரும் புயல் ஒன்றிலே அவனுடைய கப்பல் அகப்ப ட்டடுக் கொண்டது. மிகவும் இரகமு ள்ள அந்த மனிதனானவன், அந்த வேளையிலே தான் ஆண்டவர் இயே சுவினிடத்தில் பெற்றுக் கொண்ட விசு வாசத்தை தளரவிடாமல் அதிலே உறு தியாக இருந்தான். அந்த பெரும் புயலில்; உண்டாகும் விளைவு எப்படி யாக இருந்தாலும், நான் என் இயே சுவோடு இருப்பேன் என்று தன் மனதிலே அவன் அறிக்கையிட்டான். பிரியமானவர்களே, மேலானவைகளை நாடி வாழும் வாழ்க்கையானது, நன்மையான கிரியைகளைச் செய்து, நம்முடைய இரக்கத்தை மற்றவர் களுக்கு காண்பிப்பதுடன் முடிந்து போவதில்லை. இந்த உலகத்திலே பல பாகங்களிலே நாடுகளுக்கிடையே யுத்தங்களும், உள்நாட்டு சண் டைகளும் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. அவைகளின் மத்தியிலே அகப்படும் போது, நன்மை செய்ய மனமும், வசதிகளும் இருந்தும் நன்மையைவ் செய்ய முடியாத நிலைமைகள் ஏற்படுவதுண்டு. அந்த நாட்களிலே பாடுகளும், துன்பங்களும், நெருக்கங்களும் வாழ்வை சூழ்ந்து கொள்கின்றது. அந்த வேளைகளிலே, நாம் மேலானவைகளைத் தேடும்படிக்கு கற்றுக் கொள்ள வேண்டும். அருமையான விசுவாசத்தை நாம் பெற்றிருக்கின்றோம். நம்முடைய வாழ்விலே உயர்வுகள், தாழ் வுகள், சோதனைகள், வேதனைகள் ஏற்படலாம். யோபு என்ற பக்தனைப் போல பல துன்பங்கள் ஏற்படலாம். அந்த நாட்களிலும், நம்மு டைய விசுவாசத்தின் கேடகத்தை நாம் உயர்த்திப்பிடித்தவர்களாக உறு தியாக நிற்க வேண்டும். பிதாவின் வலது பாரிசத்திலே வீற்றிருந்து, நமக்காக இரவும் பகலும் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தையுடைய நம்முடைய ஆண்டவராகிய இயேசுவையே நாம் நோக்கிப் பார்க்க வேண்டும். யோபு என்ற பக்தனைப் போல, கர்த்தர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டார் என்ற இதயபூர்வமான அறிக்கை நம் வாயில் எப்போதும் இருக்க வேண்டும்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, அருமையான விசுவாசத்தை பெற்றவர்களாகிய நாம், எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கிப் போகாதபடிக்கு, மேலானா தேவனாகிய உம்மை நோக்கிப் பார்க்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபி 10:37-39