புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2021)

பொக்கிஷங்களை சேர்க்கும் வழிகள்

மத்தேயு 5:48

ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.


ஆண்டவராகிய இயேசு வழியாக உண்டான இரட்சிப்பை பெற்றுக் கொண்டவர்கள், பரலோகத்திற்குரிய மேலானவைகளை எப்படி தேடுவது? பூமியிலே வாழும் நாம் எப்படி பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைப்பது? முதலாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆண்டவர் இயேசு இல்லாமல் எவரும் பரலோக த்திலே எதையும் சேர்;த்து வைக்க முடி யாது, அங்கே செல்லவும் முடியாது (யோவான் 14:6). சுயநலம் கருதாமல், தற்பெருமையை நாடாமல், இயேசு வைப் பின்பற்றி, அவருடைய நாமத்தி னால், நாம் செய்யும் நற் கிரியைகள் யாவும் நமக்கு பரலோகத்திலே பொக் கிஷங்களை உண்டாக்கும். அதாவது, பரலோகத்திலிருக்கின்ற பரம பிதா, இரக்கத்தில் செல்வந்தராக இருக்கி ன்றார். அவருடைய பிள்ளைகளாகிய நாம், இந்த உலகத் திலே அவருடைய பிரதிநிதிகளாக இருந்து, ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களைச் செய்ய வேண்டும். 'உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங் களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை' என்று ஆண்டவராகிய இயேசு கூறி யிருக்கின்றார். இரக்கத்தில் செல்வதர்களாக இருப்பதென்பது தானதர்ம ங்கள் செய்வதுமட்டுமா? தியாக உணர்வோடு, தானதர்மங்களை செய் வது, கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான பங்கு. அதற்கு மேலாக, நம்மு டைய பரமபிதா நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யா மலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டா மலும் இருக்கிறார். அதுபோலவே, நாமும் மன்னிப்பதிலே வள்ளலாக மாற வேண்டும். அதாவது, நாம் நன்மை செய்தவர்கள், நாம் தீங்கு நினை யாதிருக்கும்போது நமக்கு எதிராக தீமை செய்தாலும் நாம், பரலோக மேன்மையாகிய இரகத்தை காண்பிப்பதில் வளர்ந்து பெருக வேண்டும். நாம் பாவிகளும், துரோகிகளும், ஆதாம் வழி வந்த மாம்ச சுபாவமுடை யவர்க ளாக இருக்கையில், நாம் நித்திய ஜீவனை அடைய வேண்டுமெ ன்று, ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவங்களை தம் மேல் சும ந்து, நமக்காக தம் ஜீவனையும் கொடுத்தார். அவரிடமிருந்த அந்த மேன் மையான சுபாவத்திலே நாம் வளரும் போது, பரலோகத்திலே நாம் பொக்கிஷங்களை சேர்க்கின்றவர்களாக இருப்போம்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, பரலோகத்தின் பொக்கி ஷங்களை நான் அறிந்து கொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களையும், அவைகளை தேடும் உணர்வுள்ள இருதயத்தையும் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:33