புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2021)

ஏன் இயேசு என்னை தேடி வந்தார்?

லூக்கா 10:42

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.


ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசுவும் அவருடைய சீஷர்களும் பிரயாணமாய்ப் போகையில், இயேசு ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள். அவள் இயே சுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற் பல வேலைகளைச் செய்வதில் மிக வும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் அக்கறையில் லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவை யானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் இந்த உலகத்திற்கு வரும் முன்னதாகவே, இந்த உலகத்தின் அளவுகோலின்படி, செல்வந்தர்கள், கல்விமான்கள், செல்வாக்குள்ள வர்கள் என்று பலதரப்பட்ட உலக மேன்மக்கள் இருந்தார்கள். இவர் களைப் போல நம்மையும் மாற்றும்படிக்காகவா இயேசு இந்த உலக த்திற்கு வந்தார்? நம்மிடத்திலே உபசாரத்தையும், பந்தியின் முதன்மை யான இடத்தையும் பெற்றுக் கொள்ளும்படிக்காகவா நம்மிடத்தில் வந்தார்? இவையெல்லாம் இந்த உலகத்திற்குரியவைகள் எனவே உலக போக்கிற்கு உட்பட்டவர்கள் அவைகளை அடையும்படிக்கு நாடித் தேடுகின்றார்கள். அன்று மார்த்தாள் இயேசுவை தன் வீட்டிற்குள் ஏற்றுக் கொண்டு உபசரித்தாள். ஆனால் அவருக்கு உபசாரம் செய்வதைக் குறி த்தே அவள் கவலையடைந்து கலங்கினாள். நித்திய ஜீவனைக் கொடு க்கும் ஜீவ உணவாகிய ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளைக் குறி த்து அவள் எண்ணமற்றவளாக இருந்தாள். அவள் சகோதரியாகிய மரி யாளோ நித்திய ஜீவனைக் கொடுக்கும் நல்ல பங்கை தெரிந்து கொண் டாள். அதுபோலவே, ஆண்டவராகிய இயேசு ஏன் என்னைத் தேடி வந்தார் என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் தனிப்பட ஆராய்ந்து பார்த்து, அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ வேண்டும்.

ஜெபம்:

நான் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று என்னை தேடி வந்த தேவனே, நித்திய ஜீவனைத் தரும் உம்முடைய திருவார்த்தைகளின் வழியிலே வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:24