புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2021)

பரலோகத்திற்குரியவைகள்

மத்தேயு 6:20

பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;


மகனே, நீ நல்ல பழக்கவழக்கமுள்ள, நன்றாக படிக்கின்ற நண்பர்க ளோடு ஐக்கியமாக இருக்க வேண்டும். இளவயதிலே நீ நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். நீ நல்ல உத்தியோகம் செய்து, கைநிறைய சம்பாதித்து சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே நாங்கள் விரும்பு கின்றோம் என்று ஒரு தகப்பனானவர், தன் மகனானவனிற்கு அறிவுரை கூறினார். ஆம், தங்கள் பிள்ளைகள், இந்த உலகத்திலே இருக்கும் உச்சித மானவைகளையே நாடித் தேடும்படி க்காய் பெற்றோர்கள் வாஞ்சிக்கின் றார்கள். பிள்ளைகள் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் களை ஊக்குவித்து அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளை காண்பித்து, அதற்காக அயராது உழைக்கின்றார்கள். நம்முடைய பரம பிதாவாகிய தேவன், இந்த உலகத்தினால் உச்சிதமானவைகள் என்று கருதப்படும் உலக ஆஸ்தி, உயர்ந்த கல்வி, அந்தஸ்துகளை விட அதி மேன்மையானவைகளை தேடும்படிக்கு நம்மை அழைத்திருக்கின்றார். ஒரு காலத்திலே இந்த உலகத்தின் ஆசைகள் நிறைந்த மாம்சமான சுபாவங்களுக்கே நாம் அடி மைகளாக இருந்தோம். அதாவது நம் உள்ளத்திலே அழுக்கான எண்ண ங்கள் கொண்டவர்களாக இருந்தோம். பொய், களவு, பொருளாசை, துர்இச்சைகள், விக்கிரக ஆராதனை போன்ற பழைய வாழ்க்கைக்குரிய எண்ணங்களை அழித்து, புதிதும் ஜீவனுமான புதிய வாழ்க்கைக்குரிய எண்ணங்களில் நாம் வளரும்படிக்காய் தேவனாகிய கர்த்தர் திவ்விய சுபாவத்தை நமக்குள் உண்டாக்கினார். இந்த திவ்விய சுபாவம் எதற் காக கொடுக்கப்பட்டிருக்கின்றது? நன்றாக படித்து, உழைத்து, நற்பெய ரோடு பூமியிலே வாழும்படிக்காகவோ? இல்லை, நாம் பரலோகத்திற் குரிய மேலானவைகளை நாடும்படிக்கே தேவனாகிய கர்த்த்தர் நமக்கு புதிய வாழ்வை தந்திருக்கின்றார். ஒரு மனிதனுடைய ஆவி அவனை விட்டு போகும்போது அவன் இந்த உலகத்திலே சம்பாதித்தவைகளில் தன்னோடுகூட எவைகளை எடுத்துச் செல்ல முடியும்? கல்வியை எடுத் துச் செல்ல முடியுமோ? நீதியாக உழைத்த பொருட்களை எடுதுச் செல்ல முடியமா? கடும் உழைப்பினால் பெற்றுக் கொண்;ட பெயரையும் புகழையும் எடுத்துச் செல்லக் கூடுமோ? இவை யாவையும் மனிதன் விட்டுச் செல்ல வேண்டும். எனவே இவைகளை அல்ல, பரலோகத்திற் குரிய மேலானவைகளை தேடி, அவைகளிலே பெருகும்படிக்கே தேவ னாகிய கர்த்தர் இரட்சிப்பின் வஸ்திரத்தை நமக்கு கொடுத்திருக்கின்றார

ஜெபம்:

உன்னதத்திலுள்ள மேலானவைகளை தேடும்படிக்கு என்னை தெரிந்து கொண்ட தேவனே, உம்முடைய திவ்விய சுபாவங்களிலே நான் அனுதினமும் வளர்ந்து பெருகும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-2