புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2021)

புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்

எபேசியர் 4:23

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.


தகப்பனானவர் தனக்கு வாங்கிக் கொடுத்த விலையுயர்ந்த புதிய உடையை, மகனானவன், ஆலயத்திற்கு செல்லும் போதும், முக்கியமான வெளி நிகழ்சிகளுக்கு செல்லும் போதும் அணிந்து கொள்வான். ஆனால் அவன் வீட்டிலிருக்கும் போதும், தன் நண்பர்களோடு சேர்ந்து செல்லும் போதும் அந்த புதிய உடையை கழற்றி வைத்துவிட்டு, பழ மையானதும் அழுக்கானதுமான உடையை அணிந்து கொள்வான். அவன் தன் தகப்பனானவர் வாங் கிக் கொடுத்த புதிய உடையை பத்திரமாக வீட்டில் பாதுகாத்து, விசேஷ நிகழ்ச்சிகளுக்காக வைத் திருக்கின்றான் என்று பொதுவாக மனிதர்கள் கூறிக் கொள்வார்கள். ஆனால், தன்னுடைய மகன் பழ மையானதும், அழுக்கானதுமான உடையை அணியக் கூடாது என்ப தற்காகவே தகப்பனானவர் அந்த விலையுயர்ந்த உடையை அவனுக்கு வாங்கி கொடுத்தார். நண்பர்களோடு செல்லும் போது அந்த புதிய உடையானது அழுக்கடைந்து போய்விடும் என்றால், அவன் தன் நண்பர்களோடு அசுத்தமான இடங்களுக்கு செல்கின்றான் என்பது தெளிவாகின்றது. நாம் நம் உடலில் அணியும் உடைகளை நேரத்திற்கு நேரம் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் நாம் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் வஸ்திரத்தை, கிறிஸ்துவின் குணாதிச யத்தை, நாம் இடத்திற்கு இடம் மாற்றி கொள்வோமானல் 'வெளி யிலே சென்றால் ஒரு குணம், ஆலயத்திற்குள் இருக்கும் போது இன்னு மொரு குணம்' என்பது போல நம்முடைய வாழ்க்கையானது மாய்மா லமுள்ளதாகவே இருக்கும். பழைய நண்பர்களோடு சேர்ந்து உல்லாச மாக இருப்பதற்கு நீங்கள் பெற்றுக் கொண்ட தெய்வீக சுபாவம் உங்க ளுக்கு தடையாக இருக்கின்றதா? அப்படியானால் உங்கள் நண்பர்கள் முன்னி லையில் நீங்கள் உங்களை எப்படிப்பட்டவர்களாக காண்பிக்கப் போகின்றீர்கள்? இந்த சுயாதீனம் உங்களுக்குரியது. நீங்கள் விரும்ப யதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த உலகத்திற்கொத்த வேஷம் தரிக்கின்ற வர்கள் இந்த உலகத்திற்குரியவர்களாகவும், பரலோகத்திற் குரிய தெய்வீக சுபாவங்களை தரித்துக் கொள்பவர்கள் தேவனுக்கு ரியவர்களாவும் இருக்கின்றார்கள். எனவே நாம் எங்கு சென்றாலும் எப்போதும் தேவனுடைய சாயலாகிய புதிய சுபாவத்திற்குரியவர்களா கவே இருக்க வேணடும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் எங்கு சென்றாலும் நான் பெற்றுக் கொண்ட இரட்சிப்பை மறந்து போகாமல், என் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 1:1-6