தியானம் (கார்த்திகை 17, 2021)
பழைய மனுஷனை களைந்துபோட்டு
எபேசியர் 4:22
அந்தப்படி, முந்தின நடக் கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட் டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந் துபோட்டு,
'நான் முந்தின ஆளாக இருந்தால் இப்போது அவனுக்கு ஒரு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருப்பேன். என்னுடைய பழைய மனுஷனை திருப்பி எழுப்பாதிருங்கள். என் இரட்சிப்பை ஒரு பக்கமாக வைத்து விட்டு, நான் யார் என்பதை இவனுக்கு இன்று காட்டுவேன்' என்ற வார் த்தைகளை கிறிஸ்துவை அறிந்தவர்களில் சிலர் கூறுவதை நாம் கேட்டி ருக்கின்றோம். அவைகளை அர்த்தம் என்ன? அனுதினமும் கிறிஸ்துவை போல நாம் மாறுவதற்குரிய வல்ல மையான பரிசுத்த வித்து நமக்கு இரட் சிப்பின் வழியாக கொடுக்கப்பட்டிரு க்கின்றது. அந்த பரிசுத்த வித்த, மர மாக வளர்ந்து நல்ல கனிகளை கொடு க்க வேண்டுமாயின், நாம் வாழ்வில் ஏற்படும் நெருக்கத்திலும், இக்கட்டி லும், போரட்டங்கிளிலும், தீமையிலும், பாடுகளிலும், உபத்திரவங்களிலும் நாம் பெற்ற இரட்சிப்பின் வஸ்திர த்தை அணிந்து கொள்ளலாம் அதாவது கிறிஸ்துவை போல அவை களை ஜெயங் கொள்ளலாம் அல்லது அந்த சுபாவத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, நாம் வாழ்வில் ஏற்படும் நெருக்கத்திலும், இக்கட்டிலும், போரட்டங்கிளிலும், தீமையிலும், பாடுகளிலும், உபத்திரவங்களிலும் நம்முடைய ஆசையின்படி, கோபத்தின்படி, உணர்வின்படி, மனித அறி வின்படி அவைகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம். இப்படி பழைய வாழ்க்கைக்குரிய சுபாவங்களை மறுபடியும் வெளிக்காட்டுவதற்கு மனித ர்களுக்கு சுயாதீனம் உண்டு. ஒரு காட்டிற்குள் பொல்லாத வனவிலங்கு கள் மத்தியிலே அகப்பபட்டு, அங்கே சில ஆண்டுளாக வாழ்ந்த மனித னொருவன், தன் கையிலே ஒரு கத்தியையும் ஒரு தடியை வைத்திரு ப்பான். தன்னை நோக்கி வரும் வனவிலங்குகளை அந்த தடியினாலே அடித்து, கத்தியினாலே குத்தி கொன்று போடுவான். ஆண்டுகள் கடந்த பின்பு, அவன் இனத்தார் அவனை தேடிச் சென்று, அவன் அமைதலான வாழ்க்கை வாழும்படிக்கு தாங்கள் வசித்து வந்த கிராமத்திற்கு அவனை கொண்டு வந்தார்கள். ஆனாலும் அந்த மனிதனோ, அவனை எதிர்த்து பேசும் எந்த மனிதனையும் அந்த தடியால் அடித்து கத்தியால் காயப்ப டுத்திவிடுவான். அது போலவே நாம் இரட்சிப்பை பெற்றிருந்தாலும் நம்முடைய பழைய வாழ்க்கையின் சுபாவங்களின்படி வாழ்வதற்கு நமக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் சோதனையின் நாட்களிலும், நாம் அந்த பழைய சுபாவத்திற்கு திரும்பாமல், பழைய வஸ்திரத்தை நாம் முற்றிலும் களைந்து விடவேண்டும்.
ஜெபம்:
இரட்சிப்பின் தேவனே, மோசப்போக்கும் பழைய வாழ்க்கைக்குரிய சுவாங்களை களைந்துவிட்டு, கிறிஸ்துவின் சாயலிலே வளர்ந்து பெருகும்படிக்கு திவ்விய சுபாவத்திலே வளர கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:8