தியானம் (கார்த்திகை 16, 2021)
இரட்சிப்பின் வஸ்திரம்
ஏசாயா 61:10
அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
ஒரு மகனானவன் மிகவும் பழமையானதும், அழுக்கானர்மான உடையை அணிந்திருப்பதைக் கண்ட ஒரு மிகவும் கவலையடைந்தவனாயிருந் தான். ஆனாலும் தன் தகுதிக்கேற்ப விலையுயர்ந்த ஆடையொன்றை மகனுக்கு வாங்கிக் கொடுத்தான். மகனானவனோ, பழைய உடையை களைந்துவிட்டு, மிக்க மகிழ்ச்சி யுடன் தன் தகப்பனானவன் கொடுத்த புதிய உடையை அணி ந்து கொண்டான். பிரியமானவ ர்களே, நாம் நம் பிறப்பிலிரு ந்து கொண்டிருக்கும் நம் அக த்தில் காணப்படும் இயல்பான சுபாவங்களே (ஜென்ம சுபவா ங்கள்) அந்த பழமையான உடையாகும். அந்த ஜென்ம சுபாவங்களின் முடிவோ நித்திய மரணம். ஆண்டவராகிய இயேசு வழியாக, அவருடைய தெய்வீக சுபாவத்திற்கு நாம் பங்காளிகளாகும் பொருட்டு, புதிதான இரட்சிப்பின் உடையை பரிசாக அளித்திருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தம் வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் யாவரும் இந்த இரட்சிப்பின் உடையை பெற்றுக் கொள்கின்றார்கள். அதாவது, நம் முடைய இயல்பான சுபாவங்களைவிட்டு, தெய்வீக சுபாவங்களில் நாம் வளர்ந்து பெருகும்படிக்காக புதியும் ஜீவனுமான பரிசுத்தவித்தை நமக்குள்ளே தந்திருக்கின்றார். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வின் சாயலில் வளரும்படிக்கு நமக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்ற தேவ னுடைய திவ்விய வல்லமையாகும். எடுத்துக்காட்டாக, நமக்கு தீமை செய்யதவர்களை குறித்த கசப்பை மனதிலே வைத்திருப்பது நம்மு டைய ஜென்ம சுபாமாகும். ஆனால் தீமை செய்தவர்களை மன்னித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு மனதார நன்மை செய்வது புதிதும் ஜீவனுமான தெய்வீக சுபாவமாகும். சுயநலம் கருதி வாழ்வது மனிதனுடைய பிறப்பின் சுபாவம். இதை மாம்சத்திற்குரிய இச்சைகள் என்றும் அழைக்கின்றோம். ஆனால் எல்லா சூழ்நிலையிலும், பிறர் நலம் கருதி வாழ்வது கிறிஸ்துவின் சுபாவம். அனுதினமும் நம்முடைய வாழ் விலே உண்டாகும் போராட்டங்கள், சவால்கள் ஒவ்வொன்றிலும் நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவைப் போல மாறும்படிக்கு, நாம் ஈவாக பெற்றுக் கொண்ட புதிய வஸ்திரமாகிய இரட்சிப்பின் உடையை, அதாவது தெய்வீக சுபாவத்தை (திவ்விய சுபாவம்) நாம் அணிந்தவர்க ளாக இருக்க வேண்டும். உயர்விலும் தாழ்விலும் தெய்வீக சுபாவங்க ளையே நாம் வெளிக்காட்ட வேண்டும்.
ஜெபம்:
நித்திய வாழ்விற்கென்று நம்மை அழைத்த தேவனே, நீர் தந்த இரட்சிப்பின் வஸ்திரத்தின் மேன்மையை உணர்ந்து, புதிய வாழ்க்கைக்குரிய சுபாவங்களை வெளிக்காட்டும்படி எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கொலோ 3:10