புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2021)

துணிகரமான வாழ்க்கை

மத்தேயு 12:30

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.


பெரு வெள்ளமானது மேற்கு திசையிலிருந்து கிழக்குதிசை வழியாக பாய்ந்து கொண்டிருக்கும் வேளையிலே ஊரிலுள்ள மூப்பர்கள், ஜன ங்கள் யாவரும், தங்கள் உயிரை காத்துக் கொள்ளுபடிக்கு கிழக்கு பக் கம் நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மனிதர்களில் ஒரு சிலரோ, இவர்கள் ஏன் கிழக்கு பக்கமாக போக வேண்டும்? நாங்கள் மேற்கு பக்கமாகத்தான் போவோம் என்று முரட்டாட்டம் பண்ணிக் கொண்டு, எதிர்த்திசையாக பய ணத்தை ஆரம்பித்தார்கள். இவர் கள் அழிவை நோக்கி துணிகர மாகவே பயணம் செய்து கொண் டிருந்தார்கள். அந்த மனிதர்களும் நமக்கு வேண்டியர்கள் என்று அவர்களோடு இணைந்து கொண்டால் இணைந் கொள்ளும் மனிதர்க ளும் தங்கள் உயிரை அவர்களோடு மாய்த்துக் கொள்ளவேண்டிவரும். இப்படியான முரட்டாட்டங்களும் துணிகரமான செயல்களும் சில வேளைகளிலே தேவனால் அழைப்பைப் பெற்றவர்கள் மத்தியிலும் வருவதுண்டு. ஒரு சமயம், தேவனுடைய ஆசாரிய ஊழியத்திற்கென்று அழைப்பை பெற்ற கோராகு என்பவன், தேவனாலே தெரிந்து கொள்ப் பட்ட மோசே ஆரோன் என்பவர்களுக்கு விரோதமாக எழுந்து, சபைக் குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமான வர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட பெரிதான கல கத்தை ஏற்படுத்தினான். கோராகு என்ற அந்த மனிதனும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த மனிதர்களும், வனாந்தரத்திலே ஒரே நாளில் அழிந்து போனார்கள். அதுபோலவே, இந்த நாட்களிலும் நம் நடுவே, தேவ அழைப்பை பெற்றிருந்தும், துணிகரமாக முரட்டாடம் செய்து, கலகங்களை ஏற்படுத்துவர்களைவிட்டு நாம் விலகியிருக்க வேண்டும். (2 தெச 3:6, 1 கொரி 5:10, தீத்து 3:10-11). இவர்களுடைய ஐக்கியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு இராததினால், இவர் கள் தங்களோடு சேர்ந்திருக்கின்றவர்களையும் சிதறடிக்கின்றார்கள். (மத்தேயு 12:30). இவர்கள் தங்கள் பொல்லாப்பின் வழியிலிருந்து மனந்திரும்ப விரும்பமில்லாதவர்கள். இவர்கள் மனம்திரும்பும்படி க்காய் நாம் நம்முடைய ஜெபங்களிலே தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தேவ கட்டளைக்கு விரோதமாக துணிகரமாக பாவம் செய்து அதிலே நிலைநிற்கும் சகோதரர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி க்கு வேதம் நமக்கு அறிவுரை கூறுகின்றது.

ஜெபம்:

உன்னதமான தேவனே, உன்னதமாக அழைப்பை பெற்றும் துணிகரமாக பாவ இருளிலே வாழும் வாழ்க்கையை நான் தெரிந்து கொள்ளாதபடிக்கு நீர் என் ஆத்துமாவை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதி 19:17-26