புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2021)

ஏற்றகாலம்வரை பொறுமையாயிருங்கள்

1 தெச 5:14

ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.


தேவனுடைய பிள்ளைகள், ஒரு வேளை பணக்காரராகவோ, சாதாரண குடி மக்களாகவோ, ஏழைகளாகவோ, உயர்ந்தவர்களாகவோ, தாழ்ந்தவர் களாகவோ, சிறியவர்களாகவோ, பெரியவர்களாகவோ, எப்படியாக இருந்தாலும் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு எவருமே விதிவிலக்கான வர்கள் அல்லர். ஆனால் சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்தக் கூடாது. ஒரு குறிப்பிட்ட ஊரை சென்றடையும்படிக்கு, வனாந் திரத்தின் பாதை வழியாக தன் மனைவி பிள்ளைகளோடு ஒரு மனி தனானவன் சென்று கொண்டிருந் தான். வாலிப வயதையடைந்த தன் னுடைய மகனிடத்திலே, பயண த்திற்கு வேண்டிய சில பொதிகளை தூக்கி தனக்கு உதவி செய்யும்ப டியாக கூறிக் கொண்டான். அதைக் கண்ட அவனுடைய சின்ன மகனான வன் தானும் அண்ணனைப் போல பொதிகளை தூக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ஆனால் அவன் தந்தையோ அவனை நோக்கி: மகனே, நீ பொதிகளை சுமக்க வேண்டிய வயது உண்டு, ஆனால் இப்போது அல்ல என்று கூறி, பாதை கடினமாக இருந்ததால், அவனுடைய மிருதுவான பாதங்கள் காயப்படாதபடிக்கும், அவன் இளைத்துப் போய்விடாதபடிக்கும், அவ் வப்போது, அவனைத் தூக்கி தன் தோளின்மேல் சுமந்து சென்றான். பரலோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தேவ பிள்ளைகள் மத் தியிலே, குழந்தைகளைப் போல புதிதாக ஐக்கியத்தில் இணைந்தவர் கள் இருப்பார்கள், சிறுவர்களைப் போல வளர்ந்து வருகின்றவர்கள் இருப்பார்கள். நன்றாக தேறி முதிச்சியடைந்தவர்களும் இருப்பார்கள். யாவரும் தேவ பிள்ளைகளே எனவே, எல்லோருமே ஒரே விதமான சுமையை சுமக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. குறிப் பிட்ட ஊரை நோக்கி சென்ற மனிதனானவன் எப்படியாக தன் பிள்ளை களை கருத்தோடு நடத்தினாரோ, அந்த மனநிலையுடையவர்களாக நாம் இருக்கவேண்டும். நல்ல மேய்ப்பனாகிய ஆண்டவர் இயேசு ஆட்டுக் குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கற வலாடுகளை மெதுவாய் நடத்தும் நல்ல மேய்யப்பனாக இருக்கின்றார். எனவே நாம் ஒருவர்மேல் ஒருவர் சுமக்க முடியாத பாரங்களை ஏற்றாத படிக்கு பெலவீனரைத் தாங்கி நடத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்

ஜெபம்:

பரம பந்தையப் பொருளுக்காக நம்மை அழைத்தவரே, சுமப்பத ற்கு அரிதான சுமைகள் மற்றவர்கள் மேல் ஏற்றாதபடிக்கு, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி வாழ உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:11

Category Tags: