புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2021)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து

கலாத்தியர் 6:2

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.


வாழ்வாதாரம் கருதி, தாங்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து இன்னு மொரு ஊருக்கு செல்லும்படிக்கு அநேகர் பயணம் செய்ய ஆரம்பித் தார்கள். அந்தப் பயணம் நீண்டதாகவும், பாதை கடினமானதாயும் இருந்தது. ஒரு வயதானவரோ, தன் பிரயணாத்திற்கு தேவையான வைகளை மட்டும் ஒரு பொதியில் போட்டுக் கொண்டு, கால்நடையாக பயணம் செய்து கொண்டிருந்தார். இரவிலே மரங்களின் கீழே ஒரு சிறிய கூடாரத்தை போட்டு அங்கு தங்கினார். மறுபடியும் பிரயாண த்தை தொடரும் போது, அவரோடு சென்று கொண்டிருந்த ஒரு மனித னானவன், பாதை கரடுமுரடான தாக இருந்ததால், வயதானவர் மிக வும் கஷ;டப்படுவதை கண்டு, அவரிடம் சென்று, ஐயா, நீங்கள் சுமக்கும் அந்தப் பொதியை என்னிடம் கொடுங்கள். வெறுங்காலாக நடக்கின்றீ ர்கள், எனவே, என்னுடைய செருப்பை அணிந்து கொள்ளுங்கள். இல் லாவிடன் அடுத்த சில மைல்களை நீங்கள் கடந்து செல்வது மிகவும் கடினம் என்று, அந்த வயதானவரின் பாரத்தை தான் சுமந்து கொண்டு சென்றான். ஆம் பிரியமானவர்களே, நம்முடைய பரலோக பிரயாணத் தின் பாதையிலே, நாம் சுமக்கத் தேவையில்லாத, பாவங்களும், உலக ஆசைகள், மாம்சத்தின் துர்க்கிரியைகளையும் நாம் முற்றிலும் அகற் றிவிட வேண்டும். ஆனால், இந்த உலகத்திலே வாழும்வரை நமக்கு தேவைகள் உண்டு. நம்மோடு பயணம் செய்து கொண்டிருக்கின்றவர் களில் சிலர், ஏதோ காரணத்தினால், உடற்பெலவீனமடைந்திருக்கலாம், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்கலாம் அல்லது தேவனை அறிய முன்னதாகவிட்ட தவறுகளின் தாக்கங்கள் சிலரின் வாழ்க்கையை பின்தொடரலாம். ஆனாலும்; தங்கள் சாதகமற்ற சூழ்நிலையிலும், பர லோகம் செல்ல வேண்டும், நித்திய ஜீவனை தாமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுடன் இப்படிப்பட்ட பாரங்களை சுமப்பவர் களுக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்க ளின் தேவை களிலே நாம் பங்கேற்க வேண்டும். அவர்கள் சோர்ந்து போகும் வேளை களிலே நாம் ஆதரவு அளிக்க வேண்டும். மற்றவர்களுடைய பாவங்க ளையும், மாம்சத்தின் இச்சைகளையும், உலக ஆசைகளையும் நாம் சுமக்கவே முடியாது. ஆண்டவர் இயேசு ஒருவரே பாவங்களையும், சபாங்களையும் சுமந்து தீர்த்தவர். எனவே நாம் நமக்கு கொடுப்பப்பட்ட பெலத்தின்படி மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

மிகுந்த காருண்யமுள்ள தேவனே, உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அதுபோலவே நானும் மற்றவர்களின் நெருக்கத்தில் இரக்கத்தை காண்பிக்கும் பொருட்டு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 8:13-14

Category Tags: