புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2021)

சிருஷ்டித்தவரின் சாயலில் வளருங்கள்

கொலோசெயர் 3:1

பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளையே நாடுங்கள்.


தான் சிறு பிள்ளையாக இருந்த காலத்திலே, கண்கண்டதெல்லாம் சாப்பிட வேண்டும், வாழ்க்கையின் தேவைகள் மட்டுமல்ல, ஆசைகள் யாவும் அத்தியவசியமானவைகளே என்ற மனநிலையோடு இருந்தான். பிள்ளையின் தகப்பனானவரோ, அவன் கேட்டதெல்லாவற்றையும் அவனுக்கு வாங்கி கொடுக்காவிட்டாலும், அவனுடைய ஆசைகளை அவ்வப்போது நிறை வேற்றி வந்தார். சிறுபையனானவன், வளர்ந்து இளைஞனான போதோ, சிந்திக்க ஆரம் பித்தான். அப்பா, இந்த சாப் பாடு எனக்கு மட்டுமல்ல உங் களுடைய உடல் ஆரோ க்கி யத்திற்கும்கூட ஆகாதது. இந்த பொருள் நமக்கு எதற்கு நம்முடைய வருமானத்திற்கு அப்பாற்பட்ட அநாவசியமான செலவு என்று கூறினான். தகப்பனானவரிடம் மனதில் எத்தனை மகிழ்ச்சி. தன் பிள்ளையாண்டான், வாழ்க்கையிலே முதிர்ச்சியடைகின்றான், வாழ்விற்கு ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்கின்றான். தனக்கு தேவையானவைகளையும், வாழ்க்கைக்கு உபயோகமானவைகளையும் மட்டுமே தகப்பனானவரின் கேட்டு பெற்றுக் கொண்டான். தன் மகனானவனின் ஆசைகளைக்கூட சந்தித்து வந்த தகப்பனானவர், மகனின் ஆரோக்கியமான தெரிவுகளை யும், வாழ்க்கைக்கு அத்தியவசியமானவைகளையும், அவன் கேட்கும் போது, அதிக மகிழ்ச்சியோடு அவைகளை நிறைவேற்றுவார் அல்லவா? ஆம், பூலோக பெற்றோராகிய நாம், நம்முடைய பிள்ளைகளின் வாழ் விலே முன்னேற்றத்தை குறித்து பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். அதை விட அதிகமாக நம்முடைய பரலோக தந்தையாகிய தேவன், நாம்; ஆத்துமாவிற்கு ஆரோக்கியமானவைகளை தெரிந்து கொள்ளும் போது பெரு மகிழ்சியடைகின்றார். அவர் நம்மை சிருஷ;டித்திருந்தும், நம்மு டைய வாழ்க்கையின் தீர்மானங்களை நாம் எடுக்கும்படியாக நமக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கின்றார். நித்திய வாழ்வடையும் வழியை காண்பித்து, அந்த வழியாய் நாம் நடக்கும்படிக்கு அவர் விருப்பமுள்ள வராக இருக்கின்றார். வளர்ந்து முதிர்ச்சியடைகின்ற பிள்ளையைப் போல, நாமும் வாழ்க்கைக்கு தேவையற்ற பாரங்களையும், பாவங் களையும் தூக்கி சுமக்காமல், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை, கோபம், மூர்க்கம், பொறாமை, வீண்வார்த்தைகள், பொய், கசப்பு, வன்மம் போன்றவற்றை தள்ளி விட்டு, பரலோகத்திற்குரிய மேன்மையானவைகளையே தேடுவோமாக.

ஜெபம்:

அன்பின் தேவனே, தேவயற்ற பாரங்களை தள்ளிவிட்டு, தேவ சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படிக்கு பரலோகத்திற்குரிய திவ்விய சுபாவங்களிலே வளரந்து பெருக கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:1-16