புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2021)

கேட்கிறவன் பெற்றுக் கொள்கின்றான்

மத்தேயு 7:8

கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகி றவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.


'என்னுடைய பிள்ளைகளுக்கு இந்தக்; கல்லூரியிலே படிப்பதற்கு அனு மதி கிடைக்க வேண்டும். என்னுடைய கணவனுக்கு அந்தப் பெரிய கம் பனியிலே வேலை கிடைக்க வேண்டும். இந்த நோய் என்னை விட்டு நீங்கிக் போக வேண்டும். நாங்கள் குடும்பமாக அடுத்த ஆண்டிலே அந்த நாட்டிற்கு போக வேண்டும்.' இப்படியாக மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காக விசுவாசத்தோடும், மனஉறுதியோடும் ஜெபிக்கின் றார்கள். சில வேளைகளிலே உப வாசித்து, பொருத்தனைகளோடு தங் கள் தேவைகள் நிறைவேறும்வரை ஊக்கமாக வேண்டிக் கொள்கின்றா ர்கள். அவர்கள் தேவைகள் சந்திக்க ப்படும் போது, மகிழ்ச்சியோடு தேவ னைத் துதித்து சாட்சி பகர்கின்றா ர்கள். தேவனால் கூடாதது ஒன்றுமி ல்லை. அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும் என்ற விசுவாசம் நமக்கு உண்டு. எனினும் நம்முடைய வாழ்விலே இனி நடப்பதற்கு சாத்தியமில்லை, இனி வாழ முடியாது என்றிருந்த பெலனற்ற வேளைகளிலும்கூட ஆண்டவராகிய இயேசு பெலன் தந்து நம்மை வழிநடத்துகின்றார் என்பதை நாம் அனுப வத்திலே கண்டிருக்கின்றோம். மற்றய மனிதர்கள் எங்கள் வாழ்விலே தீமைகளை செய்யும் போது, சில சந்தர்பங்களிலே அந்த மனநோவும் ஏமாற்றமும் எங்களுடைய பெலனுக்கு மிஞ்சியதாக இருக்கும். எங்க ளுக்கேற்பட்ட மனநோவை தாங்கிக் கொள்ள முடியாதிருக்கின்ற வேளை களிலே, எப்படி மன்னிப்பைக் குறித்து சிந்திப்பது? எப்படி மனதில் கச ப்பில்லாமல் இருப்பது சாத்தியமாகும்? ஆம், மனிதர்களுடைய பெலத் தின்படி மன்னித்து மறந்து விடுவது சாத்தியமற்ற காரியம். ஆனால் மனிதனால் கூடாதது தேவனால் கூடும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவன், தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? உலகத்திலுள்ள பெற்றோர் நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? இந்த உலகத்தின் தேவைகளை சந்திப்பவர், திவ்விய சுபாவம் அடைய வேண்டும் என்று வாஞ்சிக்கின்ற பிள்ளைக ளுக்கு இன்னும் அதிகமான பெலனை கொடுப்பார். கேளுங்கள் பரம பிதா நன்மையானவைகளை உங்களுக்குத் தருவார்.

ஜெபம்:

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று சொன்ன தேவனே, மன்னிக்கும் திவ்விய சுபாவம் என்னில் உருவாகும்படிக்கு எனக்கு பெலன் ஈந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13