புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2021)

நற்கிரியைகளை செய்ய பெலன் தந்தவர்

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


நான் அவர்களுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டேன். என் வாழ்வில் பல சுகபோகங்களை தியாகம் செய்தேன். அவர்களுடைய தேவைக ளுக்காக அநேகந்தரம் உபவாசித்து ஜெபித்தேன் ஆனால் அவர்களோ நன்றியற்றவர்களாக, எனக்கு துரோகம் செய்தார்கள். நான் அவர்களை வெறுக்கவில்லை ஆனால், என்னுடைய அகராதியிலே அவர்களுடைய கதை முடிந்து விட்டது என்று ஒரு மனிதனானவன் தன்னுடைய ஆதங் கத்தை தன் போதகரிடம் கூறிக் கொண் டான். மகனே, நீ செய்து வருகின்ற நற்கிரியைகளையும், உன்னுடைய அர் பணிப்பையும் நான் தனிப்பட்ட ரீதி-யிலே சாட்சி கொடுக்க தயாராக உள் ளேன். ஆனால் அந்த நற்கிரியைக ளானது யாராலே உண்டானது? யாரு டைய பெயராலே அதைச் செய்தா யோ, உன்னுடைய பெயராலே அதை செய்தாயோ? அல்லது இயேசுவின் நாமத்திலே அதைச் செய்தாயோ? உன் கிரியைகளை மற்றவர்கள் கண்டு பிதாவாகிய தேவனை ஸ்தோதரிக்கும்படியாய் செய்தாயா? அல்லது அவர்கள் உனக்கு நன்றியாய் இருக்க வேண்டுமென்று செய்தாயோ? இவ்வளவு தூரம் வந்திருக்கும் நீ, இன்னுமாய் ஆண்டவராகிய இயேசுவின் சாயலிலே வளர விரும்புகின்றாயா? அல்லது உன்னுடைய சுய ரூபத்தை மறுபடியும் உயிரடையச் செய்யப் போகின்றாயா? இவை களை சிந்தித்து நீயே தீர்மானம் செய்து கொள் என்று போதகரானவர் தயவாக அவனுக்கு கூறினார். பிரியமானவர்களே, நம்மையும் தம்மை ப்போல மாற்றும்படிக்கு, ஆண்டவராகிய இயேசு, தம்மைத் தாழ்த்தி அடிமையின் ரூபம் எடுத்தார். அவர் நமக்காக அசட்டைபண்ணப்பட்டு, புறக்கணிக்கபட்டவராய் பாடுகளை அநுபவித்தார். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்மு டைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;. ஏன் இத்தனை பாடுகள்? ஏன் இத்தனை உபத்திரவங்கள்? நாமும் தம்மைப் போல இந்த உலகத்திலே வாழும்படிக்கு, தம்முடைய உயிரையே சிலுவை யிலே தியாகம் செய்தார். நாம் செய்யும் தீமையின் நிமித்தம் அவர் நமக்கு நன்மை செய்வதை விட்டுவிடுபவர் அல்லர். அதுபோல, தேவனு க்கு சித்தமானால், நம்மை நற்கிரியை செய்யும்படி ஏற்படுத்தியவரரைப் போல நாமும் நன்மை செய்து பாடநுப்பதையே கற்றுக் கொள் வோமாக.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த தேவனே, நற்கிரியைகளை செய்ய என்னை ஏற்படுத்தியவரே, இது உம்மாலே உண்டாயிற்று என்பதை நான் எப்போதும் உணர்ந்தவனாய் உமக்கு நன்றி சொல்ல உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:5