புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2021)

அறிக்கையும் தியானமும்

சங்கீதம் 19:14

என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.


'எங்கள் கோபதாபங்கள் ஒரு பக்கமாக இருக்கட்டும், அவர்கள் துன்பமான நாட்களை கடக்கின்றார்கள். அவர்கள் என்னுடைய இரத்த உருத்தானவர்கள் எனவே நான் அவர்களுக்கு உதவி செய்ய வேண் டும்' என்று கூறிக் கொண்டு, கசப்பை இன்னமும் உள்ளத்தின் அடி ஆழத்தில் வைத்துக் கொண்டு, உதவி செய்யக் கூடிய ஆற்றல் மனித ர்களிடம் உண்டு. கிறிஸ்துவோடு நடப் பது என்பது ஒரு தனிப்பட்ட தீர்மா னம். பல தேவ செய்திகளை கேட்க லாம். பல தியானங்களை கேட்கலாம். ஆனால் நாளுக்கு நாள் என்னை ஆராய்ந்து சுயபரிசீலனை செய்து கொள்ளவதும் என்னுடைய சொந்த தீர்மானமே. சில வேளைகளிலே தேவ வசனங்களை கேட்கும் போது, என க்கு சொல்வதற்கு இவர் யார் என்றுகூட சில மனிதர்கள் சிந்திப்பது ண்டு. உங்கள் இருதயங்களிலே கசப்பு இருக்கின்றதா என்று எப்படி நீங்கள் உங்களை ஆராய்ந்து பார்க்கலாம்? ஒரு மனிதனுடைய இருத யத்திலே கசப்பு இருக்கின்தா என்று சுயபரிசீலனை செய்வதற்கு பின் வரும் கூற்றுக்கள் உங்களுக்கு உதவி செய்கின்றதாயிருக்கின்றது. 1. அவனை மன்னிப்பேன் ஆனால் அவன் செய்ததை மறக்க மாட்டேன் என்னும் அறிக்கை. அதாவது, எழுத்திலே மன்னிப்பை வழங்குவேன், ஆனால் என் உள்ளத்திலே கசப்பை வைத்திருப்பேன் என்று பொருள் படும். 2. அவன் என்னிடத்தில் கேள்வி கேட்டால், நான் அவனுடைய வாழ்க்கையில் நடந்த இன்னென்ன காரியங்களை கூறுவேன் என்று அவைகளை மனதிலே பட்டியல் படுத்தி வைத்திருப்பது. இது யுத்தம் செய்வதற்குரிய ஆயுதங்களை சேர்த்து வைத்திருப்பதற்கு சமமாயிரு க்கும். 3. வாழ்விலே நடந்தவைகளைளும் கடந்தவைகளையும் அதிக மாக மனதிலே தியானித்தல். இது ஒருவன் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பெலனுள்ளதாக்குவது போல அவன் மனதை கடினப் படுத்திக் பழிவாங்கும் எண்ணத்தை பெலப்படுத்திக் கொள்வதைப் போல இருக்கும். 4. மன்னிப்புக் கேட்டால் மன்னிப்பு உண்டு என்ற மனப்பான்மையும் அறிக்கையும். இந்த மனநிலை யானது, பசியினால் வாடும் ஏழை பிச்சசை கேட்டால் கொடுப்பேன் இல்லாவிடில் கொடுக்க மாட்டேன் என்பதற்கு ஒத்திருக்கும். ஒருவேளை உங்களுக்கு தீமை செய்தவர்கள் சமாதானத்திற்கு உடன்படாவிட்டாலும், நீங்கள் அவர்ளை மன்னித்து, ஆசீர்வதித்து, அவர்களுக்காக ஜெபிக்கும் படியாக ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். மனித பெலத்தி னால் செய்ய முடி யாதவைகளை, செய்து முடிக்க தேவன் பெலன் தந்து நடத்துவார்.

ஜெபம்:

என் நினைவுகளை அறிந்த தேவனே, மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். குறைகள் குற்றங்களையல்ல, உம்முடைய வசனத்தையே தியானம் செய்ய எனக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:32