புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2021)

இருதயத்தை ஆளுகை செய்வது எது?

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது


'அவன் பல ஆண்டுகளுக்கு முன்பாக என் குடும்பத்திற்கு அநியாயம் செய்தான், அதனால் தான் இப்போது அவனுக்கு இப்படி நடந்திருக்கி ன்றது' என்று ஒரு மனிதனானவன், ஒரு போதகரிடம் கூறினான். அந்தப் போதகரோ அவனை நோக்கி: மகனே, ஆண்டுகள் இன்னும் முடிந்து போகவில்லையே? இன்று அவனுடைய நிலைமை இப்படியாக இருக் கின்றது. நாளை உனக்கு என்ன நடக் கும் என்பதும் உனக்குத் தெரியாதே? வரும் நாட்களிலே உன் பிள்ளைக ளின் நிலைமை என்னவாகும் என்ப தும் உனக்குத் தெரியாதே? மகனே, அநேக ஆண்டுகளுக்கு முன்னதாக அவன் செய்த அநியாயத்தை நீ தூக்கி சுமந்து கொண்டு வந்தாய் இது உன் தேவ சமானதானத்தை இழக்க வைத்திருக்குமே என்று கேட்டார். இந்த உலகத்திலே ஒருவர் எங்களுக்கு அநியாயம் செய்யும் போது, அவன் என்னிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை அல்லது நிபந்தனை களை நாம் வைக்கின்றோம். அவன் அப்படி மன்னிப்பு கேட்டால் அவ னுக்கு மன்னிப்பு உண்டு என்று திட்டமாக கூறிவிடுகின்றோம். ஆனால் எனக் குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன் மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங் களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். தன்னை தேவனுடைய பிள்ளை என்று அழைக்கும் ஒரு மனிதனானவன், உங்களுக்கு விரோதமாக குற் றம் செய்தால் அவன் மன்னிப்பை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேதம் அவனுக்கு அறிவுரை கூறுகின்றது. அவன் அப்படி செய்யாதிருந்தால், தேவ பிள்ளைகளாகிய நீங்கள் அவனைக் குறித்த கசப்பை உங்கள் உள்ளத்திலே வைத்திருப்பது உங்களுக்கு நன்மை யாக இருக்குமோ? ஆண்டவரே தீமை செய்தவனுக்கு நான் தீமை செய்யும்படி நினைக்காமல், அவனை மன்னித்துவிட எனக்கு பெலன் தாரும் என்றும், கசப்பானது நம் உள்ளத்தில் தங்கியிருக்கவும் நாம் இடங் கொடுக்கக்கூடாது. அப்படி நீங்கள் இடங்கொடுக்கும்போது, தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்ய முடியாது. இன் னும் தேவையற்ற பாரங்களை நீங்கள் சுமக்கின்றவர்களாகவே இரு ப்பீர்கள். தேவ சமாதானம் உங்கள் உள்ளங்களையும் இல்லங்களை யும் ஆண்டு கொள்ளும்படிக்கு பூரண சற்குணத்தின் கட்டாகிய தேவ அன்பை தரித்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என் அநியாயங்கள் எல்லாவற்றையும் மன்னித்த தேவனே, கிறிஸ்து எங்களுக்கு மன்னித்ததுபோல, நாங்களும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை தாராளமாக கொடுக்கும்படிக்காய் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:19-21