புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2021)

கசப்பான வேர்

எபிரெயர் 12:15

யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,


ஒரு மனிதனானவன், தன் வீட்டிற்கு பின்புறத்திலே நன்றாக பராமரி க்கப்பட்டு, அழகாக காட்சியளிக்கும் தோட்டத்தின் நடுவே ஒரு களை முளைத்தெழும்புவதை அவதானித்தான். உடனடியாக சென்று அந்த களையை பிடுங்கிவிட்டான். சில கிழமைகளுக்குப் பின் அந்த களை திரும்ப முளைத்திருப்பதைக் கண்டு கொண்டான். மறுபடியும் சென்று அந்த இடத்தை சற்று ஆழமாகத் தோண்டி பார்த்தபோது, அந்தக் களையானது எவ்வளவு ஆழமாக வேர்விட்டிருககினறது என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். வேர்விட்ட அந்த களையை பராமுகமாக விட்டுவிட்டால், அது சீக்கிரமாக வளர்ந்து பூத்து, அதன் விதை களை பரப்பி, அந்த தோட்டம் முழுவதும் களைகளை வளரச் செய்யும். மனிதர்களுடைய இருதயத்திலும் மற்றய மனிதர்க ளைக் குறித்த கசப்பு, களையைப் போலவே வேர்விட ஆர ம்பிக்கின்றது. பொதுவாக இந்த கசப்பானது மனிதர்களுடைய மனதிலே மறைந்திருப்பதால், இதன் பாதகமான விளைவுகள் உடனடியாக வெளியே தெரியப் போவதில்லை. குறித்த காலத்திலே அது, அதன் கனியை கொடுக்கும் வரைக்கும் இருதயத்திற்குள்ளே ஆழமாக வேர் விட்டு வளர்ந்து கொண்டே இருக்கும். மதுபானம் போதைவஸ்துக்க ளுக்கு அடிமையானவர்கள் எப்படி அதை உட்கொள்ளும்வரை திருப்தி யடையாதிருக்கின்றார்களோ, கசப்பை தங்கள் இருதயங்களில் வைத்திருக்கின்றவர்களும் அவ்வண்ணமாகவே இருக்கின்றார்கள். அந்தக் கசப்பானது பழிவாங்குதலை நோக்கி சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும். மனதிலே கசப்பு உண்டாவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கலாம். இந்த உலகத்தின் போக்கில் வாழ்கின்றவர்கள் அதை நியாயமானது என்று கூறலாம். ஆனால் தாங்கள் தீமைக்கு தீமை செய்ய வேண்டும் அல்லது கேடு செய்தவனுக்கு கேடு நடக்க வெண்டும் என்று காத்திருப்பதால், மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்வின் சமாதானத்தை தாங்களே கெடு த்துக் கொள்கின்றார்கள். களைகள் வளர்ந்து பூத்து, அவை விதைகளை பரப்பி வளர்வதுபோல, கசப்பை குறித்த தியானமானது மனதிலே அனு தினமும் வளர்ந்து கொண்டேயிருக்கும். பகை, வன்மம், மூர்க்கம், வாக் குவாதம், சண்டை, கலகம் போன்ற பெரும் பாதகமான விளைவுகளை கசப்பானது வெளியே காண்பிக்கும். இவைகளும் மனிதர்கள் மனதில் மறைந்திருக்கும் தேவையற்ற பாரச்சுமைகளே.

ஜெபம்:

கிருபையைப் பொழியும் தேவனே, பரலோக பிரயாணத்தை தடை செய்யும், உள்ளத்திலே மறைந்திருக்கும் தேவையற்ற பாரச்சுமைகளை நான் இனங்கண்டு அகற்றிவிட உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:27-31