புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2021)

உலகத்தின் போக்குகள்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


ஒரு சிறுமியானவள், ஆலயத்திலே மிகவும் இனிமையான குரலிலே, தெய்வீக கானங்களை பாடி வந்தாள். அவள் ஆலயத்திலே பாடும் நாட்களிலே, அவளுடைய குரலை கேட்கும்படி பலர் ஆவலாக இருந்தார்கள். அவள் அவளுடைய வாலிப பருவத்தை அடைந்ததும், உலக பாட ல்களை வெளியிடும் ஸ்தாபனமொன்று, அவளை தங்களுடன் இணை ந்து கொள்ளும்படி அழைத்தார்கள். மேலும் அவர்கள் கூறுகையில், வரு கின்ற கிறிஸ்மஸ் நாட்களிலே தாங் கள் ஒரு இசைத்தட்டை வெளியிட இருப்பதாகவும், அவள் பாடும் கிறிஸ் மஸ் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும், பெருந்தொகையான பணத்தை கொடு ப்போம் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார் கள். அடுத்த ஆண்டிலே, அந்த ஸ்தாபனத்தார் அவளை நோக்கி: நீ உலக பாடல்களை பாடுவதில்லை, ஆனால், ஒரு நல்ல உலக பாடல் இருக்கின்றது. அதன் வரிகளிலே ஒரு குறைவும் இல்லை. அதை நீ பாடினால், உனக்கு ஐந்து மடங்கான பணத்தை கொடுப்போம் என்றார்கள். ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதம் தனக்கு கிடைக்கின்றது என்று அவள் அதற்கு சம்மதி த்தாள். ஆண்டுகள் கடந்து செல்லும் போது, அவள் உலக பாடல்களை பாடும் பெரும் பாடகியாகிவிட்டாள். பெருந்தொகையான பணம், பெய ரும், புகழும் அவளுக்கு கிடைத்தது. இந்த உலக ஐசுவரியங்களோடு ஒட்டியிருக்கும் ஐசுவரியத்தின் பாவங்களும் அவளை பற்றிக் கொண்டது. மாசற்றவளாக தெய்வீககானங்களை பாடி வந்த அந்த சிறுமி இன்று துன்மார்க்கமான பாவ வாழ்க்கைக்கு அடிமையானாள். பிரிய மானவர்களே, மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். அந்த சிறுமிக்கு வந்த அழைப்பைப் போல இன்று கல்வித் துறையிலும், விளையாட்டு துறைகளிலும், பல் வேறுபட்ட வேலைகளிலுமிருந்து மனிதர்கள் பல அழைப்புக்களை பெற் றுக் கொள்கின்றார்கள். ஆரம்பத்திலே அவை ஆசீர்வாதத்தை தருவது போல காட்சியளிக்கும். மற்றவர்களோடு அதைப் பற்றி பேசும் போது பெரும் கனத்தையும் கௌரவத்தையும் கொடுக்கும். ஆனால் அவைகள் நம்முடைய பரலோக பிரயாணத்திற்கு கண்ணியாகவும், சுமைகளாகவும் மாறிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிரு க்கிறீர்கள நம்மைக் குறித்த, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரி பூரணமுமான சித்தம் இன்னதென்று நாமே பகுத்தறியத்தறிய வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, நாங்கள் எங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் உமக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவும், இந்த உலகத்தினால் உண்டாகும் அழைப்புக்களை பகுத்தறியவும் ஞானமுள்ள இருதய த்தை தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:6