புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2021)

கர்த்தரையே நினைத்துக் கொள்

நீதிமொழிகள் 3:6

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


பாடசாலைகயிலே உயர்தரக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் மாண வனாவன், தான் படிக்கும் சில பாடங்களில் தனக்கு உதவி தேவை யெனவும், தன் நண்பர்கள் மாலை நேர வகுப்புக்கு செல்கின்றார்கள், அவர்களோடு தானும் செல்ல விரும்புகின்றேன் என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டான். அவர்களும், மாலை நேர வகுப்புக ளுக்கு வேண்டிய கட்டணத்தை அவனிடம் கொடுத்து, அவனை மாலை வகுப்புகளில் பதிவு செய்து கொண்டார்கள். சில கிழ மைகள் சென்ற பின்னர், அவனு டைய நண்பர், புதிதாக வந்திரு க்கும் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று, மாலை வகுப்புக்குச் செல்லாமல், திரைப்பட அரங்கிற்கு சென்றார்கள். அந்த மாணவ னானவனும், அவர்களோடு சேர்ந்து, மாலை வகுப்பிற்கு செல்லாமல், திரைப்படம் பார்க்கச் சென்றான். பெற்றோர் கஷ;டப்பட்டு உழைத்து, மாலை வகுப்புக்கு என்று கொடுத்த பணத்தை, திரைபடம் பார்ப்பதற்கு நுழைவுச் சீட்டிற்காகவும், சிற்றுண்டிகளுக்காவும் செலவு செய்தான். ஆரம்பத்திலே சற்று தயக்கத்துடன், புதிய திரைப்படத்தை பார்க்கச் சென்றவன், பின்னர் எந்த சலனமுமின்றி அதை தன் வழக்க மாக்கிக் கொண்டான். பிரியமானவர்களே, தன் நண்பர்களின் வழிக ளுக்கு இடங் கொடுத்ததால், அந்த மாணவனானவன் மாலை வகுப் புக்குச் சென்ற முதன்மையான நோக்கத்தை மறந்து தன் ஆசை இச்சை களுக்கு ஒருமுறை இடங்கொடுத்தான். அதனால் அவன் தன் பெற்றோ ருக்கும் நம்பிக்கை துரோகம் செய்வதற்கு துணிகரமுள்ளவனானான். அதுபோலவே, நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற நீங்கள், உங்களுடைய பிரதானமான நோக்கத்தை மறந்து போய் விடக கூடாது. நீங்கள் செய்து வரும் நற்கிரியைகளை செய்யாதபடிக்கு அவைகளை விமர்சிப்பவர்களை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். ஒரு முறை மட்டும் சபை கூடிவருதலை விட்டுவிட்டால் என்ன? ஒரு நாளை க்கு ஜெபக் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் என்ன? என்று உங் கள் வழிகளைக் குறித்து நியாயம் பேசுகின்றவர்க ளின் வழிகளுக்கு கொஞ்சமும் இடங்கொடுக்காதிருங்கள். அந்த வழிகளால் அழுத்தும் சுமைகளை உங்கள்மேல் ஏற்றி கொள்வீர்கள். நாளடைவிலே உங்கள் இருதயம் பாவத்தைக் குறித்த உணர்வற்றுப் போய்விடும். எனவே உங்கள் வழிகளிளெல்லாம் கர்த்தரையே நினை த்துக் கொள்ளுங்கள். அவர் தடைகளை அகற்றிவிட உதவி செய்வார்.

ஜெபம்:

மேலான நோக்கத்திற்காக என்னை அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தைக்கு முரணான மோசம் போக்கும் ஆலோசனை களை உணர்ந்தறிந்து அவைகளை விட்டு விலகும்படி எனக்கு பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:8