புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2021)

வாழ்வை அழுத்தும் சுமைகள்

எபிரெயர் 12:1

பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங் கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு,


ஓட்டப் பந்தையப் போட்டிற்கு தாயார் செய்து கொண்டு வந்த இளை ஞனானவன், ஓட்டப் பந்தையப் போட்டியின் நாளிலே, தான் அணிந் ருக்கும் சீருடை, காலணி முதலானவைகளைத் தெரிந்து கொள்ளும் போது, அவை தன் ஓட்ட பந்தையப் போட்டிக்கு தடையாக இல்லாதபடிக்கு, பார மற்றவைகளையே தெரிந்து கொள்வான். அவன் தன் சரீரத்தின் மேலும், தன் மனதினிலும் எந்த பாரங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். நாமும் பரலோகத்தை நோக்கி ஜீவ ஓட்டத்திலே ஓடிக் கொண்டிருக்கின் றோம். ஜீவ ஓட்டம் என்பது என்ன? நித்திய ஜீவனை இலக்காக வைத்து அதை பெற்றுக் கொள்ளும்படிக்கு அதை நோக்கி வாழும் வாழ்க்கை யாகும். இந்த ஜீவ ஓட்டத்திலே ஓடிக் கொண்டிருப்பவர்களை நாம் விசுவா சிகள் என்று அழைக்கின்றோம். ஏன் அவர்களை விசுவாசிகள் என்று அழைக்கின்றோம்? இவர்கள் ஆண்டவர் இயேசு வழியாக மட்டுமே பாவமன்னி உண்டு என்பதை விசுவாசித்து, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு, இயேசு வழியாகவே மட்டுமே நித்திய ஜீவன் உண்டு என்று ஏற்றுக் கொண்டு, அவருடைய வார்த் தைகளை விசுவாசித்து, அந்த வார்த்தைகளின்படி வாழ்கின்றார்கள். அந்த ஜீவ ஓட்டத்திலே ஓடிக் கொண்டிருக்கும் விசுவாசிகளாகிய நாம், நம்மை அழுத்தும் இந்த உலகத்தினால் உண்டாகும் சுமைகளை நம்மை விட்டு தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஜீவ ஓட்டத்திற்கு தடையான சுமைகள் எவை என்பதை நாம் இனங் கண்டு கொள்ள வேண்டும். இந்த சுமைகள் என்ன? நிச்சயமாக பாவங்கள் யாவும் நம்முடைய ஜீவ ஓட்டத்திற்கு தடையானவைகள். அதுமட்டுமல்ல, இந்த உலகத்தின் தேவை களைக் குறித்த கவலை, அழிந்து போகும் உலக பொட்களைக் குறித்த ஆசை, மனிதர்களுக்கு சுமையாகவும், அழுத்தும் பாரங்களாகவும் மாறி விடுகின்றது. ஓட்டப் பந்தைய போட்டியிலே வெற்றி பெற வேண்டும் என்று ஓடுபவனின், முழு நோக்கமும் பந்தைய பரிசுப் பொருளின்மேல் இருக் கும். அவன் வாழ்க்கையிலே அந்த பந்தையப் பொருளை அடை வதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் அவன் தனக்கு சுமை யாவே கருதி அதை விட்டுவிடுவான். அதுபோலவே, நாமும், நம்மு டைய பந்தைய பொருளாகிய நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்கும் யாவையும் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்கு கிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமி த்தி ருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

ஜெபம்:

பரம அழைப்பின் பந்தையப் பொருளுக்காக என்னை அழைத்த தேவனே, அந்த பந்தையப் பொருளை நான் பெற்றுக் கொள்ளும்படிக்கு, தடைகளை அகற்றி முன்னேற எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33-34