புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2021)

பாரஞ்சுமக்கிறவர்களே!

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


மனிதர்கள் தங்களுடைய வாழ்விலே சுமக்கும் மனப் பாரங்கள் என்ன? ஒரு சமயம் ஒரு மனிதனானவன், சிறு வயது முதல், ஊமையான ஒரு அசுத்த ஆவி பிடித்த தன் மகனை ஆண்டவர் இயேசுவினிடத்தில் கொண்டு வந்தான். அந்த அசுத்த ஆவியானது, அவனை எங்கே பிடித் தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது. அப்பொழுது அவன் நுரை தள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந் துபோகிறான். இவனைக் கொல் லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளி ற்று, என்று தன் மகனானவன் படும் வேதனையை ஆண்டவர் இயேசுவினிடத்தில் கூறினான். அந்த அசுத்த ஆவி பிடித்தவன் ஆண்டவர் இயேசுவை கண்ட வுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது. அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். ஆண்டவர் இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனு க்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் அவன் செத்தவனைப்போல கிடந்தான். இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். அந்தத் தகப்பனானவரோ, தன் மகன் படும் வேதனை யினால் மனம் பாரப்பட்டவனாக இருந்தான். அந்த மகனாவன், பிசாசின் பிடியில் அகப்பட்டு கொடிய பாரத்தை சுமந்து வந்தான். இப்படியாக சில மனிதர்கள், போதைவஸ்து, மதுபானம், மோகபாவம் போன்ற அடி மைத்தனங்களில் வாழ்கின்றார்கள். வேறு சிலர் களவும், பொய்யும் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றார்கள். இன்னும் சிலர் வேறு கொடி தான பாவ இச்சைகளிலும் கட்டுகளிலும் உழன்று தவிக்கின்றார்கள். இப்படியாக மனிதர்கள் தங்கள் வாழ்விலே விடுதலையடைய வழி தெரியாமல், பல பொதிகளை சுமந்து வேதனைப் படுகின்றார்கள். அடி மைத்தனங்களினாலே தற்காலினமாக விடுதலை யையும் இன்பத்தையும் நாடுகின்றார்கள். இப்படியாக வருதப்பட்டு பாரங்கள் சுமந்து வாழும் மனிதர்களுக்கு விடுதலை கொடுக்கும்படிக்கு ஆண்டவர் இயேசு அழை க்கின்றார். இன்று உங்கள் வாழ்வை அவரிடம் கொடுத்தால், அவர் எல்லா பாரங்களிலுமிருந்து விடுதலை தருவார்.

ஜெபம்:

விடுதலை தரும் தேவனே, என்னுடைய வாழ்க்கையிலே இருக்கின்ற வேண்டாத பெலவீனத்தை நான் முற்றும் ஜெயங்கொள்ளும்படிக்கு என் வாழ்வை இன்று நான் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:18