புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2021)

தடைகளை அகற்றிவிடுங்கள்

மத்தேயு 6:24

தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.


ஒரு கிராமத்தை நோக்கி பெரிதான புயல்காற்று வரப்போகின்றது என்பதை அறிந்து கொண்ட அதிகாரி ஒருவன், அந்த கிராம மக்களை நோக்கி, நீங்கள் துரிதமாக ஆயத்தப்படுங்கள். நீங்கள் உயிர் பிழை க்கும்படிக்கு, உங்கள் பிரயாணம் ஸ்தம்பிதமாகாதபடிக்கும் உங்கள் வீட்டிலிலுக்கும் எந்தப் பொருட் களையும் எடுத்துக் கொள்ளாமல், என் பின்னே வாருங்கள் நான் உங்களை பாதுகாப்பான இடத் திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினான். அந்த கிராமத்தின் மக்கள் அந்த அதிகாரி கூறியபடி துரி தமாகப் புறப்பட்டு அவன் பின்னே சென்றார்கள். ஆனால் ஒரு மனித னானவனோ, தன் வீட்டிலிருந்து சில பொருட்களை விட்டுவிட மனதில் லாதவனாக, தன் மாட்டு வண்டியை எடுத்து, அதன் மேலே வீட்டிலி ருந்த அநேக பொதிகளை ஏற்றிக் கொண்டான். பொதிகளின் பாரம் அதிகமாக இருந்ததால், அந்த வண்டி மிக மெதுவாக சென்று கொண்டி ருந்தது. அந்த அதிகாரியை பின் தொடர்ந்த மற்றவர்கள், வேகமாக அந்த கிராமத்தை கடந்து சென்று விட்டார்கள். பொதிகளை ஏற்றிச் சென்ற மனிதனானவன், பாதி வழியிலே சென்ற போது, புயல் காற்று வீச ஆரம்பித்தது. தான் புயலிலே மாட்டிக் கொண்டேன் என்று உண ர்ந்து கொண்ட அந்த மனிதானனவன், தன் பொதிகளை விட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தான். ஆனாலும் அவனோ புயலிலே அகப்பட்டு கொண் டான். பிரியமானவர்களே, அந்த மனிதனானவன், தனக்கு முன்னிருக் கும் கண்ணியை குறித்து உணராதபடிக்கு, அவனிடமிருந்த பொருட்கள் அவனை மிக அதிகமாக கவர்ந்து கொண்டது. இந்த உலகத்திலே உச்சி தமானவைகள் என்று கருதப்படும் எந்த பொருளோடும், புகழோடும், அந்தஸ்தோடும் நாம் பரலோகத்திற்கு செல்ல முடியாது. ஒருவேளை இவைகள் உங்களிடம் இருந்தால், அவைகளை இந்த பூமிக்குரிய தாகவே இருக்கட்டும், இவைகளை உங்கள் இருதயத்திலிருந்து இறக்கி வைத்துவிடுங்கள். இவைகளின் மேல் தங்கள் நம்பிக்கையை வைக் கின்றவர்களுக்கு இவைகள் கண்ணியாக மாறிவிடும். இரண்டு எஜமான் களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. எனவே பரலோகத்திற்குரிய பொக்கிஷங்களால் உங்கள் இருதயத்தை நிறைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டானவைகள் எவையும் என்னுடைய ஜீவ ஓட்டத்திற்கு தடையாக இருக்காதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 16:25