புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 01, 2021)

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யார்?

யோவான் 10:4

ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்த வாலிபனொருவன், தன் சிறுவயது முதல் நல்வழியிலே நடக்கும் சன்மார்க்கனாக வாழ்ந்து வந்தான். அப்படியிருந்தும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவேன் என்ற நிச்ச யம் அவன் உள்ளத்திலே இல்லாதபடியினால், ஒரு சமயம், அவன் ஆண்டவராகிய இயேசுனிடத்தில் வந்து, நித்திய ஜீவனை அடையும் படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். சற்று இங்கே தரித்;திருந்து சிந்தனை செய் யுங்கள். தேவனுடைய ஆசீர்வாதம் என்பது என்ன? ஒரு மனிதன் திரளான ஐசுவரியத்துடன் வாழ்ந்து முடிவிலே நித்திய ஆக்கினைக்குள் பிரவேசிப்பது தேவனுடைய ஆசீர்வாதமாகுமா? அல் லது உள்ளது போதும் என்ற மனதுடன் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது தேவனுடைய ஆசீர்வாதமாகுமா? வாக் களிக்ப்பட்ட மீட்பராகிய இயேசு இந்த உலகத்திற்கு வரும் முன்ன தாகவே, இந்த உலகிலே அநேக ஐசுவரியவான்கள் இருந்தார்கள். அவர் இந்த பூமியிலே வந்த பின்பும் அநேக ஐசுவரியவான்கள் வாழ்ந் தார்கள். இன்றும் அவ்வண்ணமாகவே அநேக ஐசுவரியமுள்ள மனித ர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரும் தேவனாலே ஆசீர்வ திக்க ப்பட்டவர்களா? ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்ததன் காரணம் என்ன? ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை கொடுக்கும்படியாகவே மீட்பராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஆனால் இன்று சில மனிதர்கள், நீங்கள் ஆண்டவர் இயேசுவிடம் வாருங்கள், அவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று இந்த பூமிக்குரிய செல்வங்களை மையமாக வைத்து அழைக்கின்றார்கள். இவர்களுடைய இருதயம் இந்த பூமிக்குரியவைகளால் நிறைந்திருக்கின்றது. (மத்தேயு 6:21). இயேசுவை தேடி வந்த அந்த பணக்கார வாலிபனிடத்தில் இந்த பூமிக்குரிய செல்வம் மிகையாக இருந்தும், தன் வெறுமையை கண்டு நித்திய ஜீவனை கொடுக்கும் இயேசுவிடத்தில் வந்தான். ஆனால் அவருடைய சத்தத்தை கேட்டு அவரை பின்பற்ற மனதில்லாதவனாய் போய்விட்டான். ஒருவன் நித்திய ஜீவனில் பிரவேசிப்பதே தேவனுடைய ஆசீர்வாதமாக இருக்கின்றது. இந்த உலக ஆஸ்திகளால் நிறைந்திரு ப்பது ஒருவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்காது. மேய்ப்பனின் சத்தத்தை கேட்டு அவன் பின் செல்கின்ற ஆடுககைப் போல, நல்ல மேய்ப்ப னாகிய இயேசுவின் சத்தத்தைக் கேட்டு அவருக்கு பின்னாக செல்கின்ற வர்களே நித்திய ஜீவனை அடைந்து கொள்கின்றார்கள்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, அழிந்து போகின்ற இந்த உலக ஆஸ்திகளுக்காக மட்டும் நான் உம்மை தேடாதபடிக்கு, அழியாத நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி உம் வார்த்தையின் வழியில் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:36