புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2021)

பிதா நம்மை சுத்திகரிக்கின்றார்

யோவான் 15:2

கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத் தம்பண்ணுகிறார்.


நான் தேவனுக்கென்று எவ்வளவு காரியங்களைச் செய்து வருகின்றேன். அயலிலே பல மனிதர்கள் துன்மார்க்கமான வழிகளிலும், களியாட்டங்க ளிலும் வாழ்கின்றார்கள். உலகத்திலே அவர்கள் அங்கீகரிகப்பட்டிரு க்கின்றார்கள். ஆனால் நானோ நீதியின் பாதையில் நடப்பதால் பல காரியங்களை இழந்து போகின்றேன். தங்கள் கண்போன வழியில் வாழ் கின்றவர்கள் உல்லாசமாக இருக்கி ன்றார்களே என்று சில மனிதர்கள் சொல்வதுண்டு. இந்த உலகமானது அதனுடைய போக்கிலே வாழ்பவர் களை அங்கீகரிக்கும். நாம் இந்த உலகத்தின் போக்கிற்கு உடன்படா தவர்களாக இருப்பதால் உலகம் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டாது. நாம் பிதாவாகிய தேவனுக்கு பிள் ளைகளாக இருப்பதால், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் மத்தியில் நாம் அவைகளால் கறைபடாதபடிக்கு நம்மைக் காத்து, அவர் அனுதினமும் தம்முடைய திவ்விய சுபாவங்களிலே வளரும்ப டிக்கு நம்மை சுத்திகரிக்கின்றார். நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம் பண் ணுகிறார் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். பண்படு த்தப்பட்ட நிலமாகிய இருதயத்திலே விழுகின்ற தேவனுடைய வார்த் தையானது கனி கொடுக்கின்றது. அந்த இருதயமானது பிதாவாகிய தேவனுக்கு பிரியமுள்ளதாக இருக்கின்றபடியால், அந்த கனியோடு அவர் நம்மை விட்டுவிடுவதில்லை, நாம் அதிக கனிகளைக் கொடுக்கு ம்படி, அவர் அதை இன்னுமாய் சுத்திகரிக்கின்றார். அந்த சுத்திகரிப்பின் காலம் நமக்கு கடினமாகத் தோன்றலாம். சில வேளைகளிலே, நாம் நமது வாழ்க்கையிலே முன்னேறும்படிக்கு, நம்முடைய பெற்றோர் நம்மை கண்டித்து நடத்துவதுண்டு. நம்முடைய பரம தந்தையோ, தம்முடைய பரிசு த்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிர யோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்கால த்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்கா லத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். பிரியமானவர்களே, உங்கள் இருதயமானது எப்போதும் கர்த்த ருடைய வார்த்தை கிரியை செய்யும் நல்ல நிலமாக இருக்கக்கடவதாக.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று எங்களை அழைத்த தேவனே, நான் இந்த உலகத்திலே வாழும்வரைக்கும் உம்முடைய வார்த்தை என்னில் கிரியை செய்ய நான் இடங்கொடுக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தரு ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபி 12:5-11