புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 30, 2021)

வறட்சியான காலத்தில்

எரேமியா 17:8

மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித்தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்.


ஒரு தேசத்திலே கடும் வறட்சி ஏற்பட்டிருந்ததால், அந்த தேசத்திலுள்ள பயிர் வகைகள் யாவும் பலனற்றதாய் காய்ந்து போயிற்று. வறட்சியின் நாட்கள் நீடித்திருந்ததால், கனி கொடுக்கின்ற பல பாரிய மரங்களும் பட்டுப் போயிற்று. ஆனால், அங்கிருந்த பனைமரம் மட்டும் வறட்சியான காலத்திலும் செழிப்பாக உதிராமல் காலத்தில் தன் கனியைக் கொடு த்தது. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் வறட்சியான காலங்களை நாம் கடப்பதுண்டு. அந்த வறட்சியானது, வறு மையின் நாட்களாகவோ, நெருக்க த்தின் காலமாகவோ, உபத்திரவங்க ளை கடந்து செல்லும் ஆண்டுகளா கவோ, அழுகையின் பள்ளத்தாக்கில் செல்லும் அனுபவங்களாகவோ இருக் கலாம். வாழ்க்கையில் ஏற்படும் எப்படி ப்பட்ட வறட்சியின் நாட்களாக இருந் தாலும், கர்த்தர் மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கை யாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறான். அவன் இருதயமாகிய நிலம் உணர்வுள்ளதாக இருப்பதால், தேவனுடைய வார்த்தையானது அவனில் எப்போதும் நிலை த்திருக்கின்றது. அவன் மெய்யான திராட்சை செடியாகிய ஆண்ட வராகிய இயேசுவில் நிலைத்திருக்கின்ற கொடியாக இருப்பதால், அவன் ஜீவதண்ணீரை பெற்றுக் கொள்கின்றான். அதனால் அவனு டைய வாழ்க்கையானது, தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால் வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ;ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வரு ஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தை ப்;போலிருக்கின்றது. தன் இருதயத்தை கடினப்படுத்திக் கொள்பவனு டைய இருதயமானது, முள்ளுள்ள நிலத்தைப் போலவும், வேர் ஆழ மாக வளர முடியாத துமான கற்பாறை நிலத்தைப் போலவும் மாறி விடுகின்றது. எனவே தேவனுடைய வார்த்தை கிரியை செய்யும்படிக்கு மனத்தாழ்மையும், கீழ்படிவும், நிபந்தனையற்ற அர்ப்பணிப்பும் நமக்கு அவசிய மானது. அப்போது, கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

ஜெபம்:

நித்தமும் என்னை நடத்தும் தேவனே, உம்முடைய வார்த்தை என் இருதயத்தில் நிலைத்திருக்கும்படிக்கு என் இருதயத்தின் தியானம் உம்முடைய சமுகத்திலே பிரியமுள்ளதாக இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6