புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2021)

உணர்வுள்ள இருதயம் எப்போது தேவை

சங்கீதம் 107:20

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.


ஒரு இளைஞனின் வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வைத் தியரைச் சந்திக்கச் சென்றிருந்தான். அவனுடைய வாழ்க்கை முறையை குறித்து வினாவிய வைத்தியர், அவனுடைய நித்திரை நேரம் குறைந்தி ருப்பதையும், ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளை நேரத்திற்கு உண் ணா திருப்பதையும், விற்றமின்கள் சரீரத்தில் குறைந்திருப்பதையும்; கண்டு, அவனுடைய கோளாறு குணமாவதற் குரிய மாத்திரைகளைக் கொடுத்து, கண்டிப்பாக அவன் உண்ண வேண் டிய உணவு வகைகளையும் விற்றமி ன்களையும் குறித்து அவனுக்கு ஆலோசனை கூறினார். அந்த வைத் திய ஆலோசனையைக் கேட்ட இளை ஞன், அதன்படிக்கு தன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க ஆரம்பித்தான். பிரியமான சகோதர சகோதரி களே, இந்த சம்பவத்தைத்தோடு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை முறையோடு ஆராய்ந்து பார்ப்போம். தேவனுடைய வார்த்தை விதை யாக இருந்தால், எப்போது நம்முடைய இருதயமாகிய நிலம் பண்படு த்தப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையாகிய விதை விதை ப்பதற்கு முன்பாக மாத்திரமா? இல்லை, நாம் இந்த உலகிலே உயி ரோடிருக்கும் நாள்வரைக்கும் நம்முடைய இருதயமாகிய நிலம் தேவ னுடைய வார்த்தையின்படி கிரியைகளை நடப்பிக்கும்படி பண்படுத்தப் பட்டிருக்க வேண்டும். நாம் இரட்சிப்படைந்த ஆரம்ப நாட்களாக இரு க்கலாம் அல்லது பல ஆண்டுகள் கடந்திருக்கலாம். நாம் எந்தக் கால த்திலும் எந்தப் பருவத்தில் இருந்தாலும், சில வேளைகளிலே நம்மு டைய வாழ்க்கை முறையானது சிறிது சிறிதாக தேவனுடைய வார்த்தை யைவிட்டு விலகிப் போகும் போது, ஆவிக்குரிய ஓட்டத்திலே நாம் பெலவீனமான நாட்களை சந்திக்கின்றோம். அந்த பெலவீனங்களை நாம் பாராமுகமாக விட்டுவிட்டால், காலப்போக்கிலே அது ஆவிக்குரிய வாழ் க்கையில் நோயாக மாறிவிடும். ஒரு விவசாயி தன் தோட்டத்திலுள்ள மர ங்களை அனுதினமும் கவனமாக பார்த்து, அவைகள் வீரியமாக வளர்வதற்கு வேண்டிய பசளைகளை போடுகின்றான். நோய் கொண்ட மரங்களுக்கு கிருமிநாசினியை போட்டு அவைகளின் நோய்களை அக ற்றி விடுகின்றான். அதுபோலவே, தேவனுடைய வார்த்தையாகிய விதை நம் இருதயத்தில் விதைக்கப்பட்டு வளர்ந்து வரும்போது, குறித்த கால த்திலே நம் ஆவிக்குரிய உணவும், சுகம் தரும் அருமருந்தாகிய தேவ வார்த்தையானது (1 பேதுரு 2:2, யோவான் 6:51, நீதி 4:20-22,) நம்மை பெலபடுத்தும்படிக்கு நம் இருதயம் பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்த தேவனே, ஆண்டவராகிய இயேசுவை சந்திக்கும் நாளிலே பெரும் மகிழ்ச்சியடையும்படிக்கு நான் என் வாழ்வை உம் வார்த்தையின்படி காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாத் 15:26