புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2021)

கேட்கிறவனும் உணருகிறவனும்

மத்தேயு 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிற வனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.


ஒரு மனிதனானவன் தன் தோட்டத்திலே ஒரு மாமரத்தின் விதைகள் சிலவற்றை விதைத்தான். விதைக்கப்பட்ட இடத்தை பராமரிக்கும்படி அவ்விடத்தை சுற்றிலும் வேலியொன்றை அடைத்து, அந்த விதைக ளுக்கு தேவையான அளவு தண்ணீரைப் பாய்ச்சி வந்தான். சில வாரங்கள் கடந்ததும், அந்த விதைகளானது முளைத்தெழும்ப ஆரம்பிப் பதை அவன் கண்டு சந்தோஷப்ப ட்டான். விதைகள் முளைத்து விட் டது இனி அது அதன்பாட்டிற்கு வள ரும் என்று அவன் அவைகளை அப்படியே விட்டுவிடுவானோ? அல் லது அதை சுற்றிலலுமிருக்கும் வேலி இனித் தேவையில்லை என வேலியை பிடுங்கி விடுவானோ? ஒரு வேளை சில மனிதர்கள் குறி ப்பிட்ட சில வருடங்களுக்கு பின் அந்த மரத்தை அதன்பாட்டிற்கே விட்டுவிடுவார்கள். ஆனால் நல்ல மாங்கனிகளை, குறித்த பருவத்தில் பிடுங்க விரும்புகின்றவர்களோ அந்த மரங்கள் அங்கு இருக்கும்வரை க்கும் அதை நன்றாக பராமரிப்பார்கள். இதற்கு ஒத்ததாகவே நம்மு டைய இரட்சிப்பின் வாழ்க்கையும் ஒத்திருக்கின்றது. தேவனுடைய வார் த்தையாகிய விதையானது (நற்செய்தி) நமக்கு அறிவிக்கப்பட்ட போது, அந்த வார்த்தை நம்முடைய இருதயமாகிய நிலத்திலே விழுந்தது. இரு தயமாகிய நிலமானது தேவ வார்த்தையை ஏற்று அது முளைப்பதற்கு ஏற்றபடி பண்படுத்தப்பட்டிருக்கும் போது, அந்த வார்த்தையானது அங்கே முளைப்பதற்கு ஆரம்பிக்கின்றது. நான் வார்த்தையை ஏற்றுக் கொண்டேன், ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன் என்று அப்படியே அதை விட்டுவிடமுடியுமோ? இல்லை, துளிர் விட்டிருக்கும் அந்த இளம் கன் றானது நன்றாக பராமரிக்கப்பட வேண்டும். அந்த பராமரிப்பு எதனால் உண்டாகின்றது? எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்து க்கொள் என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. தேவனுடைய வார் த்தை என்னும் வேலியானது நம் வாழ்க்கைக்கு காவலாகவும் எல் லையாகவும் இருக்கின்றது. அதாவது, நம் வாழ்க்கையை நாம் எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தேவ தாசர்கள் வழி யாக நமக்கு உபதேசிக்கப்படுகின்ற அந்த உபதேசமானது பண்பட்ட நல்ல நிலத்திலேயே ஏற்றுக் காத்துக் கொள்ளப்டும். அதாவது, தேவ வார்த்தைக்கு கேட்டு உணரவடைகின்றவர்கள்; அந்த உபதேசங்களைக் கேட்டு தங்கள் வாழ்க்கையை காத்துக் கொள்ளுகின்றார்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, உம்முடைய வார்த்தையையும் அதன் வல்லமையையும் மேன்மையையும் உணர்ந்து அவை என் வாழ்வில் பலன் கொடுக்கும்படி உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 4:23

Category Tags: