புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 27, 2021)

இலக்கை நோக்கித் தொடருவோம்...

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல்


பல இடங்களில் வேலை பார்த்து வந்தேன். ஆனால் எல்லோருமே அநியாயம் செய்கின்றார்கள். அடக்கி ஆளுகின்றார்கள். எனவே நான் ஒரு புதிய வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றேன் என்று ஒரு மனி தனானவன் தீர்மானித்துக் கொண்டான். அதன்படி அவன் ஆரம்பித்த வியாபாரம், நன்றாக போய்க் கொண்டிருந்தது. சில ஆண்டுகள் சென்ற பின்பு, வியாபாரமானது வளர்ச்சிய டைந்ததால், வியாபாரத்தின் உரிமை யாளராகிய அவன், சிலரை வேலை க்கு அமர்த்தினான். வேலைக்கு அம ர்த்தப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங் கப்பட்டது. சில மாதங்களுக்கு பின், அவனுடைய வேலையாட்களில் ஒரு வன், தான் செய்ய வேண்டிய வேலையில் கருத்தற்றவனாக இருந்தான். அந்த வேலையாளை அவன் அழைத்து, புத்திமதி கூறினான். அந்த வேலையாளோ, நீர் என்னொடு ஏன் இப்படி பேசுகின்றீர்? நீர் எனக்கு அறிவுரை கூற நீர் என்ன என்னுடைய தகப்பனா? என்று கூறி வெளியே சென்றுவிட்டான். அந்த வேளையிலே, வியாபாரத்தை ஆரம்பித்த மனித னானவன் தன் கீழ்படியாத இருதயத்தைக் குறித்து உணர்வடைந்தான். தானும் இவ்வண்ணமாகவே, வேலை பார்த்த இடங்களிலே தனக்கு அறி வுரை கூறிய மேற்பார்வையாளர்களை எதிர்த்து நின்றேன். என் முன்னே ற்றத்திற்காக அவர்கள் கூறிய அறிவுரையை வெறுத்துத் தள்ளினேன் என்று மனருவருத்தம் அடைந்தான். இன்று சபைகளிலும் சில மனி தர்களுடைய நிலைமை இவ்வண்ணமாகவே இருக்கின்றது. அதாவது, ஒட்டுமொத்தமாக எல்லோரும் அநியாயம் செய்கின்றார்கள், நான் மட்டும்தான் நீதிமான் என்ற எண்ணத்துடன், சிலருடைய, அறிவுரைகளை தள்ளிவிட்டு, தங்கள் வழிகளை தாங்களே பார்த்துக் கொள்கின்றார்கள். நாம் இன்னும் இந்த உலகத்திலே வாழ்வதால், மனிதர்கள் கூடி வரும் எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட மனிதர்கள் வருவதால், கருத்து முரண்பாடுகளும், முறுமுறுப்புக்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அவைகளை நாம் தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்த்து, நாம் முன்னேற வேண்டிய இடங்களில் முன்னேற வேண்டும். நான் தேறிவிட்டான் எனவே ஒரு சம்பூரணமான இடத்தை நான் இந்த உலகிலே ஆரம்பிப்பேன் என்று எண்ணங்கொள்ளாமல், நாம் எல்லோருமே, தேவ சித்தம் நம் வாழ்வில் நிறைவேறும்படி, இலக்கை நோக்கி முன்னேறுவோம்.

ஜெபம்:

வழிநடத்தும் நல்ல தேவனே, கோணலும் மாறுபாடான சந்ததி நடுவிலே, நோக்கத்தை இழந்து போகாமல், உம்முடைய சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:3