புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 26, 2021)

சீர்திருத்தலை ஏற்றுக் கொள்ளுங்கள்

2 தீமோத்தேயு 3:17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


பட்டப்படிப்பை முடித்து, முதலாவது வேலைக்கு சேர்ந்த மனிதனானவ னொருவன், வேலையிலே எல்லோரும் தன்னோடு பட்சமாகயிருப்பதை கண்டு சந்தோஷப்பட்டான். அனுதினமும், ஆசையோடு வேலைக்கு சென்று வந்தான். அவனுக்குரிய பயிற்சி காலம்; முடிந்து ஒரு ஆண்டு காலத்திற்கு பின்;, அவனுடைய முன்னேற்றத்தை ஆராய்ந்து பார்த்த அவ னுடைய மேற்பார்வையாளர், அவனை தனியே அழைத்து அவனை நோக்கி: பயிற்சிக் காலத்திலே நீ சில தவறுகளை விட்டிருக்கின்றாய், அதை நாங்கள் பெரிது படுத்துவதில்லை. ஆனால், நீ தொடர்ந்தும் சில தவறுகளைவிட்டுக் கொண்டிருக்கின்றாய், இன்னென்ன இடங்களிலே நீ முன்னேற வேண்டும் என்று கூறினார். அந்தப் பேச்சு அந்த மனிதனுக்கு கசப்பாக இருந்ததால், அவன் வேலையைவிட்டு இன்னுமொரு வேலைக்குச் சென்றான். அங்கேயும் ஆரம்பத்திலே அவன் நாட்கள் இன்பமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு பின், அங்கே இருந்த இயக் குனரும், அவனை அழைத்து அவன் இன்னும் முன்னேற வேண்டிய இடங்களைக் குறிப்பாக கூறினார். கோபமடைந்த அந்த மனிதன் அந்த வேலையையும் விட்டுவிட்டு இன்னுமொரு இடத்திற்கு சென்றான். இப்படியாக எத்தனை இடங்களுக்கு அந்த மனிதனானவன் வேலைக்கு சென்றாலும், எல்லா இடங்களிலும் முன்னேற்ற அறிக்கையை நிச்சய மாக சமர்ப்பிப்பார்கள். ஆனால் அந்த மனிதனானவன் தன்னைக் குறி த்த உபதேசம், கடிந்து கொள்ளுதல், சீர்திருத்துதல் போன்றவற்றை ஏற் றுக் கொள்ள மனதில்லாதிருந்தான். பிரியமானவர்களே, இவ்வண்ண மாகவே பல மனிதர்கள் இன்று வாழ்ந்து வருகின்றார்கள். தங்கள் வாழ்க்கையில் நெருக்கங்கள், கஷ;டங்கள், உபத்திரவங்கள் சூழ்ந்து கொள்ளும்போது, வாழ்க்கையில் வேறு தெரிவுகள் இல்லாதிருந்தால், அமைதலாக இருக்கின்றார்கள். ஆனால், வாழ்க்கையில் தெரிவுகள் அதிகமாக இருக்கும் போது, இந்த ஊழியர் இல்லாவிட்டால் இன்னுமொரு ஊழியர், இந்த சபை இல்லாவிட்டால் இன்னுமாரு சபை என்று துரிதமாகவே தீர்மானங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். வாழ் க்கையின் சில கட்டங்களிலே நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும் ஆனால் அந்த தீர்மானங்கள் நம்முடைய குறைகளை நியாயப்படுத்து வதற்காக இல்லாதிருந்தால் அது நன்மையானதாக இருக்கும்.

ஜெபம்:

சீர்திருத்தி நடத்தும் தேவனே, என் வாழ்க்கையின் குறைகளை சுட்டிக்காட்டும் போது, அவைகளைக் கேட்டு, உம்முடைய வார்த்தையின்படி வாழ்க்கையை நான் மாற்றிக் கொள்ளும்படிக்கு கிருபை செய் யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 19:25