புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2021)

புத்திமதியை ஏற்றுக்கொள்

நீதிமொழிகள் 19:20

உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற் றுக்கொள்.


இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உண்டு. அதன்பின்பு நான் இந்த ஆசிரிய ருடைய கதைகளை கேட்கவே தேவையில்லை என்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனொருன் தன் சக மாணவர்களிடம் கூறிக் கொண்டான். ஏனெனில் அவனுடைய மனதிலே, அந்த ஆசிரியருக்கு தெரிந்ததெல்லாம் கணித பாடம் மட்டுமே என்று எண்ணிக் கொண்ட தால், அவர் கூறும் வாழ்க்கையின் அனுபவங்களின் அறிவுரைகள் அவ னுக்கு ஒரு முடிந்த கதையைப் போல வே கசப்பாக இருந்தது. அந்த ஆண்டு முடிந்ததும், அந்த மாணவனானவன், அதி விசேஷ சித்தியோடு கணித பாடத்தில் சித்தியடைந்து மேற்ப்படிபு க்காக சென்றுவிட்டான். இனி அந்த ஆசிரியருடைய அறிவுரைகள் என க்கு அவசியமில்லை, நான் என் அலு வல்களை எங்கு சென்றாலும் பார்த்துக் கொள்வேன் என்று எண்ணி யிருந்தான். ஆண்டுகள் கடந்து சென்றது, அவன் தன் குடும்ப வாழ் க்கையை ஆரம்பித்த போது, அந்த ஆசிரியருடைய அறிவுரைகளானது அவனைப் பின்தொடர ஆரம்பித்தது. கணித பாடத்தை கற்றுக் கொண் டதால் வாழ்க்கை ஜெயித்துவிட்டேன் என்று இருந்தவன், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தான். இதுபோலவே இன்று சில மனிதர்கள் வேதத்தையும், அதன் அறிவையும், அதை தங்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்களையும் குறித்து எண்ணிக் கொள்கின்றார்கள். ஞாயிறு ஓய்வுநாள் பாடசாலையில் எனக்கு வேதம் சொல்லித் தந்த அந்த தாயாருக்கு என்ன தெரியும்? நான் இப்போது வாலிபனாக இருக்கின் றேனே. சபையின் மூப்பருக்கு என்ன தெரியும், நான் இப்போது வேதா கம கல்லுரியில் பட்டப்படிப்பை முடிக்கப் போகின்றேனே, என்று தங் கள் வாழ்க்கையைக் குறித்து தப்பான எண்ணம் கொள்கின்றார்கள். ஒரு தேவ ஊழியர் கூறும் தேவ வார்த்தைகள் தற்போது எனக்கு தடையாக இருக்கின்றது, குறித்த காலத்திலே நான் இவ்விடத்தைவிட்டு எனக்கு ஏற்ற இடத்திற்கு சென்றுவிடுவேன் என்று வாழ்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய காரியமாவது: எங்கு சென்றாலும் தேவனுடைய விதையாகிய தேவனுடைய வார்த்தை விளையும் நல்ல நிலமாக என்னுடைய இருதயம் இருக்கின்றதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி நல்ல நிலமாக இருந்தால், அதனால் உங்களுக்கு பலன் உண்டு. இல்லையேல், வாழ்க்கை பலனற்றதாக மாறிவிடும்.

ஜெபம்:

ஆலோசனை தரும் தேவனே, ஆலோசனைகளும் அறிவுரை களும் கூறப்படும் போது, அவைகளை கேட்டு, என் வாழ்க்கையை ஆராய்ந்து பாரக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6