புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2021)

யாரோடு ஐக்கியமாக இருக்க வேண்டும்

1 யோவான் 1:5

தேவன் ஒளியாயிருக்கி றார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;


'நாம் ஆண்டவர் இயேசுவைப் போல வாழ வேண்டும். அவர்; பாவி களையும் துரோகிகளையும் தேடிச் சென்றார். அவர்களோடு விருந்து உண் டார். அதுபோலவே நானும் அவ்வண்ணமாக களியாட்டங்களிலே வாழ் கின்ற நண்பர்களோடு கூடிச் செல்கின்றேன்' என்று ஒரு மனிதனானவன் தன்னுடைய வாழ்க்கை முறைமையை நியாயப்படுத்தினான். ஆண்டவ ராகிய இயேசு, இவ்வுலகிலே பாவி கள்; துரோகிகள்; என்று கருதப்படுகி ன்றவர்களை அன்றும் இன்றும் தேடிச் செல்கின்றார். அதற்கு ஒரே ஒரு கார ணம் உண்டு. அது 'ஒருவனும் கெட் டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும்' என்பதாகும். ஆனால் இன்று நாம் இயேசுவை அறிந்திக்கின்றோம் என்று கூறும் சில மனிதர்களோ, தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேற்றும்படிக்கு, சில நட்புக்களையும், உறவுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். அந்த நட்புக்களும் உறவுகளுமே அவர்கள் தங்கள் மறைவான பாவங்கைள நிறைவேற்றும் பாலமாக அமைந்திருக்கின்றது. ஆனால் அவர்கள் தங் கள் வழிகளை நியாயப்படுத்தும்படிக்கு, ஆண்டவர் இயேசுவோடு தங் கள் வழிகளை சமப்படுத்திக் கொள்கின்றார்கள். 'நீங்களும் எங்க ளோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இரு க்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதா வோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கி றது. தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷ மாயிருக்கிறது. நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லி யும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்.' என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுரை கூறுகின்றது. எனவே ஒருவன் நான் இயேசுவோடு ஐக்கிய மாக இருக்கின்றேன் என்று கூறிவிட்டு, பாவ வழிகளை விட்டு மனந்திரும்ப விருப்பமில்லாத மனிதர்களோடு ஐக்கியமாக இருந்து அவர்களுடைய வழிகளில் செல்பவனாக இருந்தால் அவனுக்குள் தேவ னுடைய சத்தியம் இல்லை. நாம் ஆண்டவாராகிய இயேசுவைப் போல பாவிகளைத் தேடிச் செல்வோமாக இருந்தால், நம் நடக்கை, பேச்சு, சிந்தை யாவும், எப்போதும், பரிசுத்த வாழ்வையும், நித்திய ஜீவனையும் குறித்ததாகவே இருக்க வேண்டும். மனிதர்களுடைய சுய ஞானம் ஒரு மனிதனையும் பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியாது.

ஜெபம்:

திவ்விய ஒளியின் பிள்ளைகளாக எங்களை அழைத்த தேவனே, ஒளியின் பிள்ளைகளாகிய நாங்கள், இருளின் அதிகாரத்திற்குள் நடக்கும் மனிதர்களின் வழிகளிலே உடன்படாதபடிக்கு எங்களை காத்துக்கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-16