புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2021)

தேவனை தரிசிப்பவர்கள் யார்?

எபிரெயர் 12:14

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.


வீட்டெஜமானனாகிய ஒரு மனுஷன் இருந்தான், பெரிய திராட்சத் தோட் டமொன்றை உண்டாக்கி, தன் தோட்டத்திலே வேலை செய்யும்படி பலரை வேலைக்கு அமர்த்தினான். அந்த எஜமானனானவன், மிகுந்த தயாள குணமுள்ளவனாக இருந்ததால், அறுவடையின் நாளிலே, அவன் வசித்து வந்த மாளிகைக்குள், தன் வேலையாட்களுக்கு பெரிய விருந்து செய்து வந்தான். ஒருநாள்? அவனு டைய தோட்டத்திலே வேலை செய் யும் யாவரும் விருந்துக்கு அழைக் கப்பட்டிருந்தார்கள். ஆனாலும், அவ ர்கள் வேலை செய்து முடித்தபின்பு, அந்த தோட்டத்திலே இருந்த கிண ற்றில் தங்களை கழுவி சுத்தம் செய்து கொண்ட பின்னரே, விருந்துக்காக மாளிகைக்குள் பிரவேசிக்க லாம் என்று கூறப்பட்டிருந்தது. தங்களை சுத்தம் செய்யாதவர்களோ தங்கள் அழுக்கோடே அந்த மாளிகைக்குள் பிரவேசிக்க முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்தார்கள். பிரியமானவர்களே, நம்முடைய ஆண் டவராகிய இயேசு கிறிஸ்துவும அந்த வீட்டெஜமானனைப் போலவே, உயர்ந்தோர், தாழ்ந்தோர், நீதிமான்கள், பாவிகள் என்ற பாகுபாடி ல்லாமல் யாவரையும் தன்னிடத்தில் அழைக்கின்றார். விபச்சாரம், களி யாட்டம், அநியாயமான உழைப்பு, சமுக அந்தஸ்து மற்றும் இன்னும் பல துன்மார்க்கமான அடிமைத்தனத்தில் ஜனங்கள் விடுதலையடைய முடியாமல் அகப்பட்டிருந்தார்கள். அவர்களை ஆண்டவர் இயேசு தேடிச் சென்றார். அதுபோலவே நம்மையும் தேடி வந்தார். நமது பாவ ங்களை நீக்கி பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான யாவற்றையும் செய்து கொடுத்திருக்கின்றார். பர லோகத்தில் நித்திய நித்தியமாய் பரனோடு வாழும்படிக்கு அழைப்பை கொடுத்திருக்கி ன்றார். ஆனால், நாம் இந்த உலத்தினால் உண்டாகும் கறையோடு அங்கே போக முடியாது. அந்த பெரிய விருந்திற்கு தன் வேலையா ட்களை அழைத்த எஜமானனானவன், தன்னுடைய மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு எப்படி சுத்தம் செய்யும் ஒரு வழியை வேலையாட்க ளுக்கு அமைத்துக் கொடுத்தானோ, அதுபோலவே நமக்கும் ஆண் டராகிய இயேசு ஒரு வழியொன்றை ஆயத்தப்படுத்தியிருக்கின்றார். இன்று சிலர் ஆண்டவராகிய இயேசு பாவிகளை நேசிக்கின்றார் என்று கூறி தங்கள் பாவ வழிகளைவிட்டு விலக மனதில்லாதவர்களாய் தங் கள் பாவங்களிலேயே வாழ்ந்துவிடுகின்றார்கள். நாம் அசுத்தத்தில் வாழு ம்படிக்கு அல்ல, நாம் பரிசுத்தமடைந்து பரலோகம் செல்லும்படிக்கே ஆண்டவர் இயேசு நம்பெலவீனத்தில் பெலனாக இருக்கின்றார்.

ஜெபம்:

பரித்தமாக்கும் தேவனேஇ இந்த உலகத்தினால் உண்டாகும் கறையை நீக்கிஇ சுத்த ஜலத்தினால் எங்களை சுத்தகரித்ததற்காக நன்றி. பரிசுத்தமாக நான் வாழ உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக.. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:27