புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2021)

தேவன் நம்மேல் வைத்த அன்பு

ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.


ஒரு பெற்றோர் தங்களுடைய ஒரே மகனை அதிகமாக நேசித்து வந்தார்கள். அவன் பாடசாலைக்குச் சென்ற போது, அங்கேயுள்ள சக மாணவர்களில் ஒருவனின் மனதை புண்படுத்தும்படியாக கேலி செய்து வந்தான். இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர், நடந்த சம்பவங்களை ஆரா ய்ந்த பின்பு, கேலி செய்த மாணவனின் பெற்றோரிடத்தில் முறையீடு செய்தார். அந்தப் பெற்றோர், தங் கள் மகனை உண்மையாக அன்புகூர் ந்ததால், அவனை அழைத்து அவ னோடு பேசி, அவன் செய்த தவறை சுட்டிக்காட்டி, அவன் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள். பெற் றோர் தங்களுடைய பிள்ளையின் தவறை பாராமுகமாக விட்டுவிடவி ல்லை. அவர்கள் அந்தக் குற்றத்தை சரி என்று ஏற்றுக் கொள்வில்லை. அத னால் அவர்கள் தங்கள் பிள்ளை யின்மேல் வைத்த அன்பு தணிந்து போகவில்லை. இவ்வண்ணமாகவே நம்முடைய பரம தந்தையும் நம்மீது அன்புகூருகின்றார். நீடிய பொறு மையுள்ளவராக இருக்கின்றார். அதுபோலவே நாமும் அவருடைய திவ்விய சுபாவத்தில் வளரவேண்டும். உன்னிடத்தில் நீ அன்புகூரு வதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பது அடிப்ப டையான தேவ கட்டளை. கண்கண்ட பிறனிடத்தில் அன்பு கூறாதவன் கண் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? குற்றம் செய்தவனை எப்படி அன்பு செய்வது? பிறனை அன்பு செய்வதென்பது அவர்களுடைய தவறுகளை நாம் சரி என்று ஏற்றுக் கொள்கின்றோம் என்பது பொருள் அல்ல. அதுபோல, சில வேளைகளிலே, ஒரு அயலவன் நம்மிடத்தில் அன்புகாட்டியிருந்தால், நாம் செய்ததெல்லாம் சரி என்பதும் பொருள் அல்ல. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இன்றும் தேவன் நம்மேல் அன்பாயிருக்கின்றார். அதனால் நான் செய்யும் குற்றங்களை அவர் சரி என்று விட்டுவிடுவ தில்லை. காலம் கடந்து செல்லும் முன்னதாகவே யாவரும் மனந்திரும்ப வேண்டும் என்றும், நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விருப்பமுள்ளவராக இருக்கின்றார். அப்படிப்பட்ட மனநிலை யானது நம்மில் உருவாக வேண்டும்.

ஜெபம்:

நீடியபொறுமையுள்ளவராயிருக்கின்ற தேவனே, பாவியாயிரு க்கையிலே, நான் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்னபதற்காக என்மேல் அன்புகூர்ந்தீர் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:5-11

Category Tags: