தியானம் (ஐப்பசி 21, 2021)
தணிந்து போகாத அன்பு
யோவான் 15:17
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.
ஒரு தகப்பனானவர், தான் உழைத்து வந்த நாட்களிலே தன் குடும்பத்தி ற்குத் தேவையான யாவற்றையும் கொடுத்து வந்தார். அவர்; தன் பிள்ளைகளை மிகவும் நேசித்து வந்தார். அவர்களும் தகப்பனை நேசித்து வந்தார்கள். அவர்கள் ஐக்கியமாகவும் ஒரே குடும்பமாகவும் வாழ்ந்து வந்தார்கள். பல ஆண்டுகள் கடந்து சென்று தகப்பனார் முதிர்வயதான பின்பு அவர் வாழ்க் கையிலே சரீர பெலவீனமான நாட்கள் ஏற்பட்ட போது, அவருடைய பிள்ளை கள் அவரை முன்பு போல ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுவதை தகப் பனார் உணர்ந்து கொண்டார். பிள் ளைகள் அவர்களுடைய அறிவுக்கு வந்த பின்னர் எத்தனையோ குற்றங் களை செய்திருந்தாலும், அவர்களின் உயர்விலும் தாழ்விலும், அவர்க ளைத் தள்ளிவிடாமல், தன்னால் முடிந்த ஆதரவை வழங்கி வந்த தகப்பனார், தன் முதிர்வயதிலே இந்த உலக வாழ்க்கையின் உண்மை நிலையைக் கண்டு மிகவும் மனம்வருந்தினார். உறவுகளுக்கிடையிலே இருக்கும் அன்பும் ஐக்கியமும் நெருக்கத்தின் நாட்களிலே சோதித்தறிய ப்படும். வாழ்க்கையிலே எல்லாம் நிறைவாயும் உயர்வாகவும் இருக்கும் போது மனிதர்களின் ஐக்கியமும் அன்பும் உறுதியாயிருப்பது போல தோன்றும். ஆனால் குறைவும், தாழ்வும் ஏற்படும்போது அன்பு என்ற பதத்தின் உண்மை நிலையானது வெளிப்படும். உபத்திரவம் மிகுதி யினால் அநேகருடைய அன்பு தணிந்து போகும் என்பது உண்மை. ஆனால், தேவனிலே நிலைத்திருக்கின்றவர்கள் நாளுக்கு நாள் தேவ அன்பிலே வளர்ந்து பெருகுகின்றவர்களாக இருப்பார்கள். இந்த உலக த்தினால் அன்பு என்று கூறப்படுவது, சூழ்நிலைகளோடு மாறிப்போய் விடும். கடைசி காலங்களிலே, மனிதர்கள் நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும் இருப் பார்கள் என்று வேதம் கூறுகின்றது. இவர்கள் தேவ பக்தியுள்ளவர்கள் அல்ல. மாறாக தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள். எனவே உங்களின் அன்பு சூழ்நிலைகளோடு மாறிப் போகுமானால் உங்கள் வாழ்க்கையை நீங்களே நிதானித்தறிந்து கொள் ளுங்கள். நாம் இயேசுவின் சாயலிலே வளருகின்றவர்களாக இருந்தால், அவருடைய அன்பிலே நாம் நிலைத்திருக்கின்றவர்களாகவும் இருப் போம்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, உம்முடைய அன்பு சூழ்நிலைகளோடு தணிந்து போவதில்லை, அதுபோலே நானும் அந்த அன்பிலே வளரும்படி க்கு, உம்மிலே நிலைத்திருக்கும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 13:1-13