புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2021)

கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடு

மத்தேயு 7:24

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவை களின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலை யின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.


ஒரு வீட்டை கட்டுவதற்கு திட்டமிடுபவன், வீட்டை எந்த இடத்திலே கட்டப் போகின்றேன் என்பதைக் குறித்து எப்போது சிந்திக்க வேண்டும்? ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாகவா? அல்லது நிலத்தை வாங்கிய பின்பாகவா? இப்படியாக ஒரு மனிதனானவன், ஒரு மலையடிவாரத்தி லுள்ள உள்ள இடத்திலுள்ள நில மொன்றை வீடு கட்டுவதற்காக வாங் கினான். அவன் அதை வாங்கிய பின்பு, அந்தப் பிரதேசத்தைக் குறி த்து நன்கு அறிந்த அவனுடைய நண்பனொருவன் அவனை நோக்கி: நண்பா, இந்த மலையிலே மண் சரிவு ஏற்படும் வாய்ப்புக்கள் அதி கம், எனவே இங்கே உன் வீட்டை கட்டுவதைக் குறித்து எச்சரிகை யாக இரு என்று கூறினான். அதன் பின்பு, நிலத்தை வாங்கியவன் அதைக் குறித்து நன்கு ஆராய்ந்து பார்த்தபோது, அவன் நண்பன் கூறியது உண்மை என நிச்சயித்துக் கொண்டான். எனவே, அறிந்தும் ஒரு ஆபத்தான இடத்திலே நானும் என் குடும்பமும் வாழக்கூடாது என்று தனக்கு இப்போது கொஞ்ச நஷ;டம் ஏற்பட்டாலும் பராவாயில்லை என அவன் வாங்கிய நிலத்தை வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ;டத்துடன் விற்றுவிட்டான். இப்படி யான சில வேளைகளில், நம்முடைய வாழ்க்கையிலே நாம் சிந்திக் காமல் செயலாற்றிவிடுவதுண்டு நினைக்காமல் பேசுவதுண்டு. இந்த உலக பொருட்களை குறித்த விஷயத்திலே நாம் நஷ;டப்பட்டாலும் ஒரு வேளை அதை மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், ஆத் துமாவிற்கு நஷ;டம் விளைவித்தால் அதை யாரால் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்? எனவே, இந்தப் பூமியிலே நம்முடைய வாழ்வானது ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையின்டி அமைக்கப்பட வேண்டும். நாம் செய்யும் எந்தக் கிரியையும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை என்வாழ்வில் நிறைவேற்றுவதற்கு தடையாக மாறிவிடக்கூடாது. நம் வாழ்வில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் தற்போது நம் பார்வைக்கு நன்மையாகத் தோன்றினாலும், ஆண்டுகள் கடந்து செல்லும் போது, அவையே நாம் தேவ சித்தத்தை நிறைவேற்றமுடியாதபடி பெரிய தடைக்கல்லாக மாறிவிடுகின்றது. எனவே நம்முடைய செய்கைகளை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஜெபம்:

வழிகாட்டும் தேவனே, நான் செய்யும் செயல்களையும் நான் பேசும் வார்த்தைகளையும் குறித்து நான் உணர்வுள்ளவனா(ளா)க இருக்கும்படிக்கு என்னை நீர் காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-2