புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2021)

பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

நீதிமொழிகள் 3:6

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.


'உன் வழிகளிளெல்லாம் கர்த்தரை நினைத்துக்கொள்' என்பதன் பொருள் என்ன? நான் வேலைக்கு, பாடசாலைக்கு, கடைக்குச் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் மட்டும் கர்த்தரை நினைத்துக் கொள்வதா? முதலாவதாக 'வழிகளெல்லாம்' என்பதன் பொருள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம்; முன்னெடுக்கும் எல்லாச் செயல்களிலும் எனக்கு வாழ்வு கொடுக்கும் கர்த்தரை மற ந்து விடக்கூடாது. முக்கியமாக, நாம் கர்த்தருடையவர்கள், நம் வாழ்வின் எல்லாத் தீர்மானங்களிலும்; கர்த்தரே மையமாக இருக்க வேண்டும். எடுத் துக்காடாக, நான் எதைப் படிக்க வேண்டும்? எந்த கல்லூரியிலே படி க்க வேண்டும்? நான் எப்படிப்பட்ட உத்தியோகத்தை செய்ய வேண்டும்? எங்கே செய்ய வேண்டும்? என்பது நம்முடைய வாழ்வில் நடக்கும் சில செயற்பாடுகள். 'நினைத்துக் கொள்' என்பதன் பொருள் என்ன? கர்த்தாவே கூட இரும் என்று சொல்லிவிட்டு எனக்கு விருப்பமானதை செய்து முடிப்பதா? அப்படியல்ல, அவருடைய ஆலோசனைகளை நான் ஏற்று, அதன்படிக்கு என் வாழ்வின் தீர்மானங்களை நான் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவனாகிய கர்த்தரை அறியாத ஜனங்கள், திரும ணம் சம்பந்தத்தை செய்யும் முன்பு, தங்கள் முன்னோரது பாரம்பரியத் தையும், தங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பொருத்தங்களையும் கரு த்தோடு ஆராய்ந்து பார்க்கின்றார்கள். அவர்கள் தங்களது அறியாமை யிலே வாழ்ந்தாலும், தங்கள் வழிமுறைகளிலே மிகவும் வைராக்கியம் பாராட்டுகின்றார்கள். இதற்கொத்ததாக ரேகாபியருடைய சந்தததியை குறித்து கர்த்தர் எரேமியா தீர்க்கரிசியின் நாட்களிலே கூறியிருக்கின்றார் (எரோமியா 35ம் அதிகாரம்) ஆனால் தேவனாகிய கர்த்தரை அறிந்த ஜனங்களில் சிலர், திருமண ஒப்பந்தங்களிலே, தேவனுடைய ஆலோச னையைத் தள்ளிவிட்டு, தங்கள் சுயபுத்தியின்படி தீர்மானங்களை எடுத் துக் கொள்கின்றார்கள். கர்த்தர் செய்யாதே என்று கூறிய காரியங்க ளைச் செய்துவிட்டு, கர்த்தர் அதை ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரு ம்புகின்றார்கள். பல ஆண்டுகளுக்கு பின்போ, தங்கள் சொந்த தீர்மா னங்களினாலே வரும் பாதகமான விளைவுகளை காணும் போது, கர்த் தர் இதை ஏன் அனுமதித்தார் என்று கூறிவிடுகின்றார்கள். பிரியமான வர்களே, உங்கள் பாதைகளை செவ்வைப் படுத்தும் தேவ ஆலோச னையின் வழியிலே நடவுங்கள்.

ஜெபம்:

ஆலோசனை தரும் தேவனே, என்னை நான் ஞானி என்று எண்ணிக் கொள்ளாமலும், மதியீனமான தீர்மானங்களை என் வாழ்விலே நான் எடுக்காதபடிக்கும் என்னை நீர் காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 35:13