புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 18, 2021)

ஜீவ ஓட்டமும் போராட்டமும்

எபிரெயர் 12:12

ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,


நமக்கு நியமிக்கபட்ட ஓட்டப் பந்தயம் இருக்கின்றது. அந்த பந்தய த்திலே நமக்கு போராட்டம் உண்டு. ஓட்டப்பந்தையத்திலே ஓடுவதற்கு நம்முடைய கால்கள் பெலனுள்ளதாக இருக்க வேண்டும். போரா ட்டத்திலே ஜெயிக்க எங்கள் கைகள் உறுதியுள்ளதாக இருக்க வேண் டும். நம்முடைய ஓட்டம் நித்திய ஜீவன் என்னும் இலக்கை நோக்கி யிருக்கின்றது. நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாரத்தையும், பாவத்தை யும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிரு க்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறு மையோடே ஓடவேண்டும். அந்த இல க்கை நோக்கி செல்லும் போது நாம் சத்துருவானவனை எதிர்த்து போர் செய்ய வேண்டும். மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்க ளோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்க ளிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயி ராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளா யிருக்கிறது. நீங்கள் சீராக ஓடமுடியாமலும், முன்னேறிச் செல்லமுடி யாமலும் உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் உங்கள் முழங்கால்களை தளர்த்தும் பெலவீனம் என்ன? நீங்கள் சத்துருவின் தந்திரங்களை எதிர் த்து போராட முடியாமல் உங்கள் வாழ்க்கையிலே உங்கள் கைகளை தளர்ந்து போகப் பண்ணும் பாவம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தும்படிக்கு வேதம் கூறும் ஆலோசனை என்ன? 1. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்த வேண்டும். 2. யாவரோ டும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாட வேண்டும். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. 3. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும், யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதி னால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும் உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜீவ ஒட்டத்திலும், சத்துருவை எதிர்த்து போராடும் போராட்டத்திலலும் தேவ ஆவியானவர் உங்களுக்கு துணை யாளராக இருக்கின்றார்.

ஜெபம்:

என் கால்களை தள்ளாடாமல் காக்கும் தேவனே, என் வாழ்விலிருக்கும் வேதனை உண்டாக்கும் வழிகளை நான் விட்டு விடும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12