புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2021)

விசுவாச சோதனையில் வெற்றி

சங்கீதம் 77:11

கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;


அனுதினமும் நம்முடைய வாழ்வை அழுத்தும் பாரங்கள் அதிகமா யிருப்பதாலும், நாம் நினைத்த காரியம் கைகூடாமல் தாமதிப்பதினா லும், சில வேளைகளிலே நாம் சோர்ந்து போய்விடுகின்றோம். அந்த வேளைகளிலே மனதிலே பலவிதமான அவிசுவசத்திற்குரிய யோசனை கள் தோன்றும். ஆபிரகாமிற்கும் சாராய்க்கும் பிள்ளைகளில்லா திரு ந்தபோது, அவர்களுக்கு அவர்கள் வழியாக பெரிய சந்ததியையொன் றை ஏற்படுத்துவேன் என்று தேவ னாகிய கர்த்தர் வாக்குரைத்தார். அவ ர்கள் முதிர்வயதானபோது, சாராள் கர்ப்பப்பிறப்பாலல்ல வேறுவழியாக தங்களுககு சந்ததி உருவாகும் என் றாள். சாராளின் வார்த்தைக்கு ஆபி ரகாம் செவிகொடுத்தான். ஆனால் கர்த்தர் சாராள்; முதிர்வயதானபோது அவள் வழியாகவே ஆபிராகாமுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார். இவ்வண்ணமாகவே, உங்களுடைய வாழ்விலும் தேவனுடைய வாக்கு த்தத்த்தைக் குறித்த சந்தேகங்கள் எழும்பலாம். 'ஆண்டவர் நித்திய காலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப் பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக் குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபேயிற்றோ? தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்க மான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ?' என்று தேவ பக்தன் தன் சங்கீதத்திலே குறிப்பிட்டிருக்கின்றார். இப்படியாக சிந்தனைகள் உங்களை நெருக்கும் போதெல்லாம், அது உங்களுடைய பெலவீனம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த வேளைகளிலே, தேவனுடைய வழிகளைக் குறித்து தியானம் செய்யுங்கள். அவர் செய்த பலத்த செயல்களை நினைவுகூருங்கள். வேதத்திலே காணும் பரிசுத்தவான்க ளின் வாழ்க்கையிலே அவர் செய்த அதிசயங்களையும் மட்டுமல்ல, உங்கள் வாழ்விலே இதுவரைக்கும் செய்த அதிசயங்களை தியானி யுங்கள். அவருடைய ஈவுகளை ஒவ்வொன்றாய் சொல்லித் துதியுங்கள். 'தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. நம்முடைய தேவ னைப்போல பெரிய தேவன் யார்? அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே. ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண் ணினீர்.' என்று அவருடைய மகத்துவங்களை அறிக்கையிடுங்கள். விசுவாச சோதனையை ஜெயங்கொள்ளுங்கள்.

ஜெபம்:

வழிநடத்தும் தேவனே, வேதத்திலே காணப்படும் மேகம் போன்ற திரளான சாட்சிகளையும், என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளiயும் நான் தியானித்து, உம்மைத் துதிக்க உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2