புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2021)

அதிசயமான வழிகள்

பிரசங்கி 11:5

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.


தேவனுடைய ஜனங்கள் சுமார் 400 வருடங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, ஆளோட்டிகளால் கடுமையாக நடத்தப்பட்டார்கள். ஆனாலும் பல தலைமுறையாக எந்தவிதமான யுத்தம் செய்த அனுபவங்களும் அற்றவர்கள். யுத்தத்தில் ஒருபோதும் நிற்காதவர்கள். உங்களுக்கு ஒரு செழிப்புள்ள தேசத்தை தரு வேன் என்று தேவனாகிய கர்த்தர் அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த வாக்கை நம்பி அவர் கள் புறப்பட்டார்கள். அவர்களு க்கு வாக்களிக்கப்பட்ட தேசத்திலே பராக்கிரமமுள்ள பலத்த மனிதர் கள் இருந்தார்கள். தேவ ஜனங்க ளாகிய இஸ்ரவேலர் இருந்த நிலைமையின்படி, இந்த உலக த்தின் பார்வையிலே அந்த தேச த்தை சுதந்தரித்துக் கொள்வது ஒரு கற்பனைக் கதை. அவர்கள் அடி மைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று அணியணியாய் புறப்பட்டார்கள். பிள்ளைகள் தவிர, புருஷர்கள் மட்டும் ஆறு இலட்சம் பேர். இவர்கள் சமுத்திரத்தின் கரையிலே பாள யம் இறங்கினார்கள். அத்தனை இலட்சம் ஜனங்கள் சமுத்திரத்தை கடப்பதற்கு எத்தனை கப்பல் தேவைப்படும்? இந்த அறிவு இல்லாமல், அவர்களை நடத்திய தலைவன் அவர்களை கடல்கரைக்கு வழிநடத்தி னானா? என்று இந்த உலகத்தார் சிந்திக்கலாம். ஆனால் அங்கே தேவ னாகிய கர்த்தர் கடலை இரண்டாகப் பிளந்து, ஜனங்களை வெட்டாந் தரையில் நடப்பது போல நடந்து போகப் பண்ணினார். இப்படிப்பட்ட செயலை முன்பு அவர்களில் ஒருவரும் கண்டதுமில்லை, கேள்விப்பட்ட துமில்லை, அது அவர்கள் விசுவாசத்திற்கு அப்பாற்பட்ட காரியமாக இருந்தது. இதுவே தேவனாகிய கர்த்தருடைய வழி. சமுத்திரத்திலே கப்பல் இந்த பதையில் வந்து, இந்த பாதையில் போனது என்று அடையாளம் இருப்பதில்லை. அதுபோலவே கர்த்தருடைய வழிகளும் இருக்கின்றது. கர்த்தருடைய வழிகள் ஆழமறியாத கடலைப் போன்றது. அவருடைய வழிகள் ஆச்சரியமானவைகள். அவருடைய வழிகள் மனி தனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டவைகள். எனவே, அவர் சொன்னதை நிறைவேற்றும்வரைக்கும் அவருடைய வார்த்தையை நம்பிக் காத்தி ருங்கள். அவர் சொன்னதை செய்து முடிக்கின்ற தேவனாயிருக்கின்றார்.

ஜெபம்:

அதிசயம் செய்யும் தேவனே, மனிதர்களுடைய வழிகளின் முடிவிலே அழிவு உண்டு, உம்முடைய வழியிலே செல்கின்றவர்களுக்கு நித்திய வாழ்வு உண்டு. உம்முடைய வழிகளை எனக்குப் போதித்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:8-9