புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2021)

மனப்பூர்வமாய் மன்னியுங்கள்

யோனா 3:10

தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.


மகா நகரமாகிய நினிவேயின் அக்கிரமம்; மிகுதியானதானால் தேவ னாகிய கர்த்தர் அந்த நகரத்தின் மேல் நியாயத்தீர்பு செய்யும்படி எழுந் தருளினார். தான் நினைத்ததை செய்வதற்கு முன்னதாக, தம்முடைய தீர்க்கதரிசியாகிய யோனாவை அவர்களிடத்தில் அனுப்பி, அவர்களை எச்சரித்தார். யோனா அவர்களை நோக்கி: இன்னும் நாற்பதுநாள் உண்டு. அப்பொழுது நினிவே கவி ழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான். அப்பொழுது நினிவேயின், ராஜா வும், அவனுடைய ஊழியர்களும், ஜனங்களும் தேவனுடைய வார்த் தையை விசுவாசித்து, தேவன் முன் னிலையில் தங்களைத் தாழ்த்தி, பொல்லாத வழிகளைவிட்டுத் திரு ம்பி, உபவாசித்து ஜெபித்தார் கள். தேவன் அவர்கள் மனந்திரும்புதலைக் கண்டு அவர்களுக்கு இரங்கி னார். நினிவேயின் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்பின் செய்தி யோ தேவ கிருபையாக இருந்தது. அந்தக் கிருபையை அவர்கள் அசட் டை செய்யாமல், முரட்டாட்டம் பண்ணாமல், பிரயோஜனப்படுத்திக் கொண்டார்கள். இன்றைய நாட்களிலே, மனிதர்கள் தேவனுடைய எச்ச ரிப்பை தேவ கிருபையாக கருதுவதில்லை. தங்கள் வழிகளை குறித்து எச்சரிப்பைக் கூறும் சபை ஊழியரின் சத்தத்திற்கு செவி சாய்த்து, தங் கள் வழிகளை ஆராய்ந்து மனதிரும்புவதற்குப் பதிலாக, தேவ வார்த்தை யின்படி எச்சரிப்பை வழங்கும் சபை ஊழியர்களை பகைத்து, முரட்டா ட்டம் பண்ணிக் கொண்டு, தூர தேசங்களிலிருக்கும் தங்கள் வழிகளை அறியாதவர்களின் செய்திகளை இன்ரநெற் வழியாக கேட்டு திருப்திய டைகின்றார்கள். தங்கள் காதுகளுக்கு எவை இனிமையாக இருக்கி ன்றதோ அதையே கேட்க விரும்புகின்றார்கள். பிரியமானவர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகளின் போக்கை நன்றாக அறி ந்த நீங்கள் அவர்களுக்கு எச்சரிப்பை வழங்குகின்றீர்கள். அந்த எச்ச ரிப்பு அவர்களின் அழிவுக்காக அல்ல, அவர்கள் தங்கள் போக்கை மாற் றிக் கொள்வதற்காகவே அப்படிச் செய்கின்றீர்கள். அதுபோலவே நம்மு டைய பரம பிதாவும், நம்மேல் அன்புகூர்ந்து, நாம் அழிந்து போகாமல் இருக்கும்படிக்கு உங்களுக்கு எச்சரிப்பை வழங்கும் போது, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். அப்போது நீங்கள் தெளிவாக பார்க்கும்படிக்கு தேவன் உங்கள் கண்களை பிரகாசமுள்ளதாக்குவார்.

ஜெபம்:

கிருபையுள்ள தேவனே, நீர் உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை அனுப்பும் போது, நான் என் இருதயத்தை கடினப்படுத்தாமல், என்னை தாழ்த்தி உம்மைக் கிட்டிச் சேர என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:9

Category Tags: